பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 ஆங்கிலம் கற்ற சமயப் பற்றோ அன்பு முறையோ இல்லாத அந்த அலுவலர் கோயிலுக்குச் சென்று கணக்கு களைப் பார்வையிட்டு ஒழுங்குற இருப்பதை அறிந்து வியந்தார். அவருக்கு அடிகளார் பெருமை முன்பின் தெரி யாது. பலரும் அடிகளாரின் சிறப்பை அவரிடம் எடுத்து மொழிந்தனர். . . அறிந்துகொண்ட அவர் மீண்டும் அடிகளாரை அணுகி வருத்தம் தெரிவித்தார். பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, நீங்களே மீண்டும் அறங் காவல் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடினார். பதவி விலகல் கடிதம் தந்தபின் மீண்டும் ஏற்றுக் கொள்ளுதல் அழகாகாது என்று கூறி அடிகளார் மறுத்து விட்டார். அலுவலர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். வாரியார் சொற்பொழிவு அடிகளார் அறங்காவல் தலைமைப் பொறுப்பு ஏற்றி ருந்த காலத்தில், மாலையில் திருக்கோயிலில் சொற் பொழிவு நடத்த ஏற்பாடு செய்தது மட்டுமன்று; கடவுள் திருமேனி ஊர் சுற்றிவரும் போதும், பின்னால், திருமுறை இசை நிகழ்ச்சியும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடை பெற்றுவர ஏற்பாடு செய்யப்பெற்றது. எம்.எம். தண்ட பாணி தேசிகரின் குழுவினர், தெருத்தோறும் ஆங்காங்கு நின்று தமிழ் இசை அமிழ்தத்தைத் ததும் பச் செய்து சென்றுகொண்டிருந்தனர். அக்குழுவிற்குப் பின்னால், திரு முருக கிருபானந்த வாரியார் ஆங்காங்கு நின்று இசையுட னும் நடிப்புடனும் சொற்பொழிவு செய்து எதிர்காலத்தில் தாம் முத்தமிழ் வித்தகராக ஆகப் போவதற்கு அடி கோலிக் கொண்டு சென்றார். . ஞானியார் அடிகளாரின் அருளகத்தை அணுகியதும்