உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வாரியார் அங்கு நின்று சொற்பொழிவு செய்யத் தொடங் கினார். வாரியார் ஞானியாரிடம் பாடம் கேட்டவர். ஞானியார் அருளக வாயிலில் நின்று கொண்டு புன்முறுவ லுடன் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். யானும் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். முக்காடிட்ட பெண் ஒருவர் ஏதோ சொல்வதுபோல் வாரியார் தாமும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஏதோ சொல்லி நடித்தார். அடிகளார் உட்பட அனை வரிடமிருந்தும் புன்முறுவல்கள் பூத்து மலர்ந்தன. அங்கே அப்போது வாரியார் கூறிய சுவையான கருத்து ஒன்று வருமாறு: 'புலால் உண்பவர்கள் மரக்கறி உண்பவர்களை நோக்கி, நீங்கள் கத்தரிக்காயை வெட்டிச் சாப்பிடுகிறீர் களே - அது மட்டும் உயிர்க் கொலையல்லவா? மரம் - செடி - கொடி - புல் - பூண்டு ஆகிய அனைத்திற்கும் உயிர் உண்டு - எனவே, மரக்கறி உண்பவர்களும் உயிர்க் கொலை செய்பவர்களாகவே கருதப்படுவர் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், ஆட்டை வெட்டினால், அது மே-மே என்று கத்துகிறது - கதறுகிறது - துடிக்கிறது. கத்திரிக்காயை வெட்டினால் அது அவ்வாறெல்லாம் செய்வதில்லை. ஒருவேளை உங்கள் வீட்டுக் கத்தரிக்காய் அவ்வாறு கத்திக் கதறித் துடிக்கின்றதோ என்னவோ - ஆனால் எங்கள் விட்டுக் கத்தரிக்காய் நறுக்கும்போது அமைதியாகவே இருக்கிறது'- என்ற ஒரு கருத்தைச் சுவைபடக் கூறினார். இவ்வாறெல்லாம் அடிகளார் அறங்காவல் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த நேரத்தில் நடக்கச் செய்து பொது மக்களிடையே பெரும் புகழ் பெற்றார். - 1924-டிசம்பர் - புலிசையில் நடைபெற்ற சமாச மாநாட்டில் அடிகளார்க்குப் பொற்கவசம் இட்ட ஊற்று