உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

ஞாயிறும் திங்களும்



அண்ணா பேசினார் ஆண்டுகள் ஐம்பதின் அப்பாலே ஒரைந்து தாண்டியவன் நானெனினும் தள்ளாமை கண்டதிலை ; என்றும் இளைஞனென ஏறுநிகர் காளைஎன ஒன்றும் உணர்வுடைய உள்ளம் உடையவன்நான் ; என்றாலும் வெண்மை எனது தலைமுடியில் நன்றே படர நலமிக்க என்னுளத்தைச் சொல்ல முடியாத் துயரொன்று கவ்வியது நல்ல இளமை நமைவிட்டு நீங்கிடுமோ? வேண்டா முதுமைவரும் வேளை நெருங்கிடுமோ? தீண்டாமல் போகாதோ? தேய்ந்திடுமோ நம்இளமை? என்றொருநாள் என்மனையில் ஏங்கித் தனித்திருந் தொன்றும் இமைமுடி ஒய்ந்து தளர்ந்திருந்தேன்; ஆழ்கடலின் மேற்புறத்தை ஆர்த்துக் கரைகடக்க நீள்கரையில் மோதி நிமிர்ந்தெழுந்த பேரலைகள் ஒரக் கரைகடக்க ஒண்ணாமல் மீளுங்கால் நேருமொலி என்செவியில் நீங்கா தொலிசெய்ய, விசிவெருங் காற்று விளையாடி இன்பத்தைப் பூசி எனதுடலில் பூரிப்புச் செய்திருக்கச் சென்னைக் கடற்கரையின் சிரெழிலை நோக்கியவா றென்னை மறந்தங் கினிதே நடந்துவந்தேன்; வாழும்நாள் எல்லாம்நம் வாழ்வுக்கே நாவசைத்தோன் நாளும் கடலலையாம் நாவதனால் தாலாட்டப் பேசாமல் சந்தனப் பேழைஎனுந் தொட்டிலிலே ஆசான் நெடுந்துயிலில் ஆழுங் கரையோரம் வந்தேன் உடல்சிலிர்த்தேன் வாடிவரும் என்னுளத்தில் செந்தேன் துளித்ததுபோற் செம்மாந்து நின்றேன்நான் ; அண்ணாஎன் அண்ணாஎன் றார்த்தேன்; அருள்பொழியும் கண்ணான்என் கண்முன்னே காட்சி தரநின்றான்; வாமண்ணா என்று வணங்கித் தலைநிமிர்ந்தேன் ; "பாமன்னா வாழ்க" எனப் பையச் சிரித்திருந்தான் ; மெல்ல சிரித்தாய்நீ மேலோய்நின் வாய்ச்சிரிப்புச் சொல்லும் பொருள்தெரியச் சொல்லிடுக என்றேன்நான்