உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

85


 'உன்னைத்தான் தம்பி உயிர்போல் நினைந்திருந்தேன் என்னைத்தான் நம்பி இருந்தாய்நீ உண்மையிது ; மண்ணுலகில் வாழுங்கால் என்னை மதித்துவந்தாய் கண்மணிபோல் உன்னைக் கருதி மகிழ்ந்தேன்நான் ; என்னோ டிணைந்துநீ ஏற்ற துயரெல்லாம் எந்நாளும் எண்ணி இறுமாப் படைகின்றேன் ; பூண்ட அறப்போர்கள் புக்க சமர்க்களங்கள் மீண்டும் நினைத்தாலே மேனியெல்லாம் புல்லரிக்கும் ! தம்பி யுடையான் படைக்கஞ்சான் என்றிருந்தேன் நம்பி யதுபோல நாளெல்லாம் வென்றுவந்தாய்! வென்றுவந்த நீயின்று வேறு நினைவுகளைத் துன்றிவர விட்டுத் துவள்கின்றாய்! நாடோறும் உன்னை நினைந்தே உளம்நொந்தாய் ! உன்னிளமை தன்னை நினைந்தும் தணியாத் துயர்கொண்டாய்! ஆளடிமை செய்யாமல் ஆண்ட இனத்தவன்நீ வாளுடைய தோளுயர்த்தி வட்டமிட்டுப் போர்முழுதும் வெற்றிக் கொடிநாட்டி வீரப் புகழுயர்த்திச் சுற்றித் திரிந்தவன்.நீ சோர்ந்து கிடப்பதுவோ? நாட்டை நினைந்தாயா? நாடாண்ட உன்னினத்தின் பாட்டை நினைந்தாயா? பாடகலக் கேடகலத் தன்னாட்சி பெற்றுயரச் சற்றும் நினைந்தாயா? உன்னாட்சி பெற்றிங் குயர நினைந்தாயா? சாதி தொலைத்தாயா? சாத்திரக் குப்பைகளை மோதித் தகர்த்தாயா? மோத நினைந்தாயா? ஒதித் திரிவதில்தான் உள்ளம் மகிழ்கின்றாய்! சாதித்துக் காட்டிடச் சற்றும் நினைந்ததுண்டா? மூத்த தமிழ்மொழியை மொய்க்கும் பகைநீக்கிக் காத்துப் புரக்கக் கருத்தில் நினைந்தாயா? உன்னை நினைந்தே உளம்நொந்தாய்! உன்னிளமை தன்னை நினைந்தும் தணியாத் துயரடைந்தாய்! இந்த நிலைகண்டே ஏங்கி வருந்திமனம் நொந்து சிரிக்கின்றேன்" என்று நுவன்றான் ; மறப்போம்பின் மன்னிப்போம் என்றஒரு மாற்றம் தரத்தகுந்த அண்ணா தவறுளதேல் மன்னிப்பாய்! பொன்னை மறப்பேன் பொருளை மறந்திருப்பேன் என்னை மறப்பேன் பொருளை மறந்திருப்பேன் என்னை மறப்பேன் இனிய மனைமறப்பேன்