உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

87



என்பால் வருகின்ற எத்துயருந் தாங்கிடுவேன் அன்பால் உயரண்ணா அன்னைத் தமிழ்மொழிக்குத் தீங்கு வருமென்றால் தேறுவ தெப்படியோ ? ஏங்குகிறேன் அண்ணாநீ என்னவழி சொல்கின்றாய்? கண்ணாகக் காக்கும் கழகத்தை மாய்க்கவரின் புண்ணாக என்மனந்தான் போகாதோ? நீபுகல்வாய் என்று மனம்நொந் திருவிழிகள் நீர்சொரிய நின்றேன் அறிஞர் நிறைமொழி வாய்மலர்ந்தார் : "செந்தமிழ்க்கா தீங்கு? சிறிதேனும் வாராது ; முந்தை வரலாற்றை முன்னிறுத்திச் சிந்தனைசெய்! எத்தனைக் கற்கள் தடைபோல் இருந்தாலும் அத்தனையும் மோதி அகற்றும் மொழியாம் தனக்கு வரும்பகையைத் தானே தகர்க்கும் தனித்திறமை கொண்டிலங்கும் தாய்மொழிக்காதீங்கு ? பழகுதமிழ்ப் பண்பாட்டைப் பாரில்நிலை நாட்டும் கழகம் அழியுமென வீணே கலங்குகிறாய்! வையத்தைச் சூழ்கடலை வாயுால் குடிப்பனெனப் பொய்வைத்த நெஞ்சன் புளுகுவதை நம்புவதோ? விண்ணகத்துச் சூரியனை வீழ்த்துவேன் என்றொருவன் மன்னகத்துச் சொன்னால் மதியாரோ பித்தனென? தன்மானத் தாளமுத்து தம்பி நடராஜன் முன்னாவி ஈய முளைத்த கழகமடா வேளா யுதமென்ற வீரமகன் தந்தஉயிர்ப் பாலால் வளர்ந்த பசுமைக் கழகமடா! துத்துக்குடியான் துணிவுடைய நெஞ்சத்தான் ஏத்தவரும் கே.வி.கே. சாமி எனுந்தம்பி தந்த உரத்தால் தழைக்கும் கழகமடா! எந்த விதமழியும் ஏன்கலங்கு கின்றாய்? மகமதியத் தோழர் மசீது முகைதீன் முகமலரத் தந்தஉயிர் மூச்சுக் கழகமடா! தப்பேதும் செய்யாத் தளிரனைய மாணவர் துப்பாக்கிக் குண்டால் துடிதுடித்து விழுங்கால் சிந்துசெந் நீரால் செழித்த கழகமடா! அந்தக் கழகத்தை ஆரழிக்க வல்லார்கள்? ஆலங் குடிதந்த அன்பன் சிதம்பரம் கோலம் மிகவுடையான் கொள்கைசேர் பொற்செழியன் எத்தனையோ தம்பிமார் ஈந்த உயிராலே இத்தரையில் நாம்வளர்த்த ஈடில் கழகமடா! 87