பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ஆராய்ச்சியில் மிகுந்திருக்கும் இனத்தாரிடத்திலும் கற்பைக் காண முடியாது. முன்னவர் அறியாமையினாலும், பின்னவர் அலட்சியத்தாலும் கற்பைக் கைகழுவி விடுகின்றனர். கீழை நாட்டினரிடையே கற்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குட்பட்டிருக்கிறது. நாகரிகத்தில் (வள்ளுவர் கூறும் நாகரிகமல்ல) மேம்பட்டவர்களாக விளங்கும் மேனாட்டினரிடையே, கற்பு அதிக மதிப்புப் பெறுவதில்லை. பிரெஞ்சு நாட்டில் கற்பு மிகவும் இழிந்த நிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் 10 நிமிடத்திற்கொரு உந்துவண்டித் திருட்டும், 40 நிமிடத்திற்கொரு கற்பழிப்பும் நடை, பெறுவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் விபசாரம் அதிகமில்லை, ருசிய நாட்டில், விபசாரத்தைச் சட்டபூர்வமாகத் தடுத்துக் கடுந்தண்டனையளிப்பதால், கற்பு அங்குக் காக்கப்படுகிறது. படியாத மக்கள் பாவத்திற்கஞ்சி, இழி செயல் புரிவதில்லை. வறுமை தாக்கும்போது மட்டும், வேறு வழியின்றிக் குற்றம் செய்கின்றனர். ஆனால் மிகவும் படித்த மக்களுக்குப் பாவத்தில் நம்பிக்கை கிடையாது. கற்பை இழப்பதைக் குற்றமாகவும் அவர்கள் கருதுவதில்லை, எதிர்காலத்தில் தனி மனைவியுரிமை என்ற நிலைமாறி, அதிலும் பொதுவுடைமைக் கொள்கை ஏற்படலாம் என்பது உலகப் பேரறிஞரான இரஸ்ஸலின் கருத்தாகும்.

தோடர்கள் கற்பைப் பற்றிக் கவலைப்படாமலிருப்பதற்கு இரண்டு காரணங்களுண்டு. முதலாவது காரணம் அறியாமை. ஒவ்வொரு தோடர்குல ஆணுக்கும், ஒவ்வொரு பெண் கிடைக்காமலிருப்பது இரண்டாவது காரணம். பெண்களின் பற்றாக் குறையினால், ஒவ்வொரு பெண்ணும் பல ஆடவரைக் கணவராக ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை -(Polyandry}க் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு அமையாமல், வேறுசில ஆடவரைக் காதலர்களாகவும் ஒரு பெண் ஏற்றுக்