பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஊர்க் கவுண்டன் முன்னிலையில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும்கூடி இவ் வொப்பந்தத்தை முடிப்பர். இரு வீட்டாரும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவராக இருப்பின் அவ்விரண்டு ஊர்களின் ஊர்க் கவுண்டர்களும் அவ்விடத்தில்கூடி இதை நடத்தி வைப்பர். பட்டக்காரனின் அனுமதி பெற்றே இதைச் செய்ய வேண்டும்.

மணப் பெண்ணுக்கு விலையாகப் பரிசம் வாங்கும் வழக்கம் இவர்களிடம் உண்டு. அது அவரவர்களின் தகுதிக்கேற்பக் குறைத்தோ கூட்டியோ பெறப்படும், பிள்ளை வீட்டார் பணமாகவும், பொருள்களாகவும் இதை அளிப்பர். ஊத்தங்கரை வட்டத்திலுள்ள பச்சை மலையாளிகளின் பெண்ணுக்குப் பரிசமாக நான்கு கண்டகம் தானியமும், நான்கு பகோடா ( ரூ. 14)க்களும், கன்றோடு ஒரு பசுவும் கொடுக்க வேண்டும். மற்ற இடங்களிலுள்ள மலையாளிகள் ரூ. 10-லிருந்து ரூ. 50 வரை பரிசம் கொடுக்கின்றனர். மணச் சடங்குகளை நடத்தி வைக்கும் ஊர்க்கவுண்டர் முதலியவர்களுக்குக் கட்டணமாக ரூ. 10-8-0 அளிக்க வேண்டும். ஆனால் சில ஏழைகளால் இப் பூராத் தொகையையும் கொடுக்க முடியாது. அப்போது இத் தொகையின் ஒரு பகுதியை மட்டும் கொடுப்பர். மீதியைப் பட்டக்காரன் கொடுத்து விடுவான். ஆனால் பல தவணைகளில் பட்டக்காரனுக்கு அப் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். இக்கடன் ஆண்டுக் கணக்காக நீண்டு செல்வதுமுண்டு. பெற்றோர் தம் திருமணத்தின்போது பட்ட இக் கடனை, மக்கள் தோன்றிப் பட்டக்காரனுக்குத் தீர்ப்பதுண்டாம். ஒரு கிழவன் குமரியைத் திருமணம் செய்து கொள்ள நேரிட்டால், நிறையப் பரிசம் கொடுக்க வேண்டும்.

பச்சை மலையில் வாழ்வோர் மணமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை யன்று நலுங்கு வைப்பர். புதன் கிழமையன்று இரு வீட்டின் முன்னும் பந்தல்கள்