பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

போடப்படும். வியாழக்கிழமை பெண் வீட்டில் திரு மணம் நடைபெறும். பொதுவாக மலையாளிகளின் திருமணம் மாப்பிள்ளை வீட்டிலேயே நடைபெறும். பெண் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் மூன்று புதுப் பாத்திரங்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கலசம்போல் வைத்து, புதன்கிழமை இரவு விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று வணங்குவர். அப்போது தாம்பூலம் எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும். இம் மரியாதை மிகவும் கண்டிப்போடு எதிர்பார்க்கப்படுகிறது. இத் தாம்பூலத்தில் பெரிய துரை ஐந்து பங்கும், மற்ற துரைகள் ஒவ்வொருவரும் நான்கு பங்கும், மந்திரிகள் ஒவ்வொருவரும் மூன்று பங்கும், குட்ட கவுண்டன் இரண்டு பங்கும், மூப்பன் ஒரு பங்கும் பெறுவது வழக்கம். இச் சடங்கு முடிந்ததும் மணமகன் மணமகளுக்குக் கூறை பரிசளிப்பது வழக்கம். இது கருப்புக் கரையிட்ட வெள்ளைச் சேலையாகவோ அல்லது சிவப்புச் சேலையாகவோ இருக்கும். இதனுடைய நீளம் 12 முழத்திலிருந்து 17 முழம் உடையதாகவும், அகலம் இரண்டு அல்லது மூன்று முழம் உடையதாகவும் இருக்கும், ஆனால் பெரிய மலையாளிகள் மட்டும் 3 அல்லது 4 முழமுள்ள கூறை அளிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. கொல்லி மலையில் மணப் பெண் விடியற் காலத்தில் ஏழு மணிக்கு முன்பாக மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். திருமணச் சடங்குகள் அங்கு நடைபெறும்.

மணமகன் தாலியை மணமகளின் கழுத்தில் வைத்ததும், பின்னால் நின்று கொண்டிருக்கும் ஊர்க் கவுண்டன் அதைக் கட்டுவது வழக்கம். பிறகு மணமகனின் கையைப் பெண்ணின் கையில் வைத்து, ஊர்க் கவுண்டன் தாரை வார்த்துக் கொடுப்பான். ஆனால் பெரிய மலையாளிகளின் வழக்கம் இதனின்றும் மாறுபட்டது. 'கணியான்' என்பவன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவான். மணமகளின் கலவிக்குக்

கு.வ.—6