பக்கம்:தமிழர் மதம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் காக (ரு) சிவ பெருமானின் எண் மறச் செயலகமும் (அட்ட வீரட் டம்) தமிழ் நாட்டிற்குள் விருத்தல். 'பூமன் சிரங்கண்டி பந்தகன் கோவல் புரமதிகை மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் குறுக்கை யமன் கட வூரிந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுத் திங்களுஞ் சூடி தன் சேவகமே.' (சு) சிவன் நடஞ் செய்யும் அம்பலம் ஐந்தும் தமிழ் நாட்டி விருத்தல். (எ) முருகனும் சிவனும் வேதத் தெய்வ மன்மை . (அ) உருத்திரன், இந்திரன், அக்கினி ஆகிய மூவர்க்கும் வேதத்தில் வந்துள்ள . சிவ' என்னும் அடைமொழி, நல்ல அல்லது மங்கல என்றே பொருள் படுதல். (+) வேத ஆரியர், வட நாட்டுச் சிவனியரை, சிவக்குறி வணக்கம் பற்றி ஆண்குறி வணக்கத்தார் (சிச்ன தேவா) என்று பழித்தமை. (40) ஆயிரத் தெண் சிவத் திருப்பதிகளுள், ஒரு சிலவே வட நாட்டி விருத்தல், (சக) கல்லால மர நிழலில் நால்வர்க்குத் திருமறை கற்பித்த திருவாசிரியனைத் தென்முக நம்பி (தக்ஷிணா மூர்த்தி) எனல். (2) சிவன் என்னும் சொல் செவ்வண்ணன் என்று பொருள் படுதலும், சிவனுக்கு அழல் வண்ணன், அந்தி வண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்க ளுண்மையும். திருமால் மதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள் மாயோன் மேய காடுறை யுலகமும் என்று, மால் வணக்கம் தமிழகத்து முல்லை நிலத்திற் குரிய தாகத் தொல் காப்பியத்திற் சொல்லப் பட்டிருத்தல் (அகத். இ). - (உ) துழாய் மாலையும் கலுழ(கருட)வூர் தியும் முல்லைத் திணைக் குரியன வாதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/187&oldid=1429429" இலிருந்து மீள்விக்கப்பட்டது