பக்கம்:தமிழர் மதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன் கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற் கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றிய தாகும். "தெய்வந் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.' (குறள். ருரு). என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சரன்றாகக் கொண்டிருத்தல் வேண்டும். பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே. தீயானது, கொல்லுந்தன்மையால் அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவுசமைக்க வுதவியும் கொடுவிலங்குகளை வெருட்டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற் கும், உரியதாயிற்று. (ரு) அன்பு இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத் தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்பு பற்றியதாகும். இதினின்றே, விண்ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று. (கூ) கருதுகோள் முதற்காலத்திற் குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந்நிலத்திற் கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ் வொரு பெருநிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந்தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல்தீங்கிற் கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது. கண்ணாற்காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம் கருதுகோளின் வீனைவேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/25&oldid=1428872" இலிருந்து மீள்விக்கப்பட்டது