பக்கம்:தமிழர் மதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

aaeses 1 குமரிநிலை யியல் ௧. சிறுதெய்வ வணக்கம். (க) பேய் வகைகள் திடுமென்று கொலையுண்டவர் அவர்க்குக் குறித்த வாழ்நா ளெல்லை வரையும், வரம்பிறந்த கொடியோரும் தூய பெரியோ ராற் சாவிக்கப்பட்டவரும் நெடுங்காலமும், இ ற ந்தபின் பேயாய்த் திரிவ ரென்பது, பொதுவான கருத்து. அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை,மயல் (மருள்) என்பன பேயின் பொதுப்பெயர் கள். பேய்களுள் நல்லனவும் உள; தீயனவும் உள. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி (சடை முனி), அரமகள், அணங்கு எனப் பேயினம் பல திறத்த தாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச் சாத்தன் என்பர். பேய்களுட் காட்டேறி தூர்த்தேறி முதலிய பலவகைக ளிருப்பு தாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம் பெரும்பூதம் என இரு வகைய. "குண்டைக் குறட்பூதம்" (தேவா.இசச:க). அரமக ளைத் தேவமகள் என்று, அரைத் தெய்வத்தன்மை கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/29&oldid=1428879" இலிருந்து மீள்விக்கப்பட்டது