பக்கம்:தமிழர் மதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் ஒரு தனி யினமாகக் கூறுவது இலக்கிய வழக்கு. அரமகளிர் (aymphs), மலையர மகளிர் நீரர மகனிர் என இருவகையர், இருவகையரும் அடுத்த மாந்தரை அச்சுறுத்திக் கொல்வதால், சூரர மகளிர் எனப்படுவர். சூர் என்பது அப்பெயர்க் குறுக்கம். “எக்கர் நண்ணிய எம்மூர் வியன்றுறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே.> (குறுந்.ருங) பன்மையிற் குறிக்கப் பட்டதனால், அவர் கூட்டங் கூட்டமாக வாழ்வதாகக் கொள்ளப்பட்டனர் போலும்! அணங்கு என்பது, தன் அழகு மிகுதியால் ஆடவரை மயக் கிக் கொல்லும் பெண்பேய். "தாக்கணங்கு” என்றார் திருவள் ளுவரும் (குறள்.க0அஉ). கொல்லிமலை அப்பெயர் பெற்றது ஒரு தாக்கணங்கினாலேயே. கொல்வது கொல்லி. உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின் இயர்நியயத்ற்ரயலருமமாக தேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய வினைமாண் பாவை" (நற். கஅரு). இதனுரையில், கொல்லிப்பாவை-அம்மலையிலுள்ள தேவ ரையும் முனிவரையுந் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக் கரும், அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும் படி, தேவ தச்ச னாக்கிவைத்த பெண்வடி வினது. அவுணரும் அரக்கரும் போதரு காலை, அவர் வாடை பட்டவுடன் தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லு மென்பதனை, 46. திரிபுரத்தைச் செற்றவனுங் கொல்லிச் செழும்பாவை யுந்நகைக்கக் கற்றதெல்லா மிந்தநகை கண்டேயோ (சித்திரமடல்) என்றதனாறு மறிக." என்று, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறித்திருப்பதைக் காண்க. அவுணரை யும் அரக்கரையுங் கொல்லத் தேவ தச்சன் புனைந்த பொறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/30&oldid=1428880" இலிருந்து மீள்விக்கப்பட்டது