பக்கம்:தமிழர் மதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் எல் - க.ஒளி."எல்லே யிலக்கம்." (தொல்.சொல். உளக). உ. வெயில்.(பிங்.). ங.கதிரவன். "எற்படக் கண் போன் மலர்ந்த" (திருமுரு. எச.).எற்பாடு =கதிரவன் சாயுங் காலம். ௪. பகல். " எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறம்.கஎ0).ரு.நான். (பிங்.). 0.0 எல்லவன்-கதிரவன். "எல்லவன் வீழு முன்னம்'" (பாரத. பதினெட், கககூ). எல்லினான் - கதிரவன். "புயங்க முண்டுமிழ்ந்த வெல்லி னானென்'> (கந்த பு. அக்கினி. உ.உங.). எல்லோன் - கதிரவன். (பிங்.). எல்லீ = க. கதிரவன், (பிங்.). உ. பகல். இரவோ டெல்லியு மேத்துவார்" (தேவா. ௩௪௪ : அ). ஓ.நோ: Gk.helios. புது + எல் - புத்தெல்-புத்தேள் - புதிதாக ஒளிவடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். "புத்தே ளுலகத்தும் (குறள். உக௩). இதனால், எவ் என்பது கதிரவனுக்கும் தேவனுக்கும் பொதுப் பெயரானமை காண்க. திங்கள் ஞாயிறு மறைந்த இராக்காலத்தில், நிறைந்தும் குறைந் தும் மறைந்தும் அதற்குச் சிற்றளவு தலைமாறாகத் தோன்றுவது திங்கள். தழு--தகு-திகு-திகழ்-திங் கள். தழு-தழல்- தணல். தழதழ -தகதக. தக-தகம் -தங்கம். ஆயிரக்கணக் காண வெள்ளிகளை விட விளக்கமாய்த் திகழ்வதால், திங்கள் எனப்பட்டது. சிற்றொளி வீசுதல் தவிர வேறொரு நன்மையுஞ் செய்யா விடினும், வேனிற்கால வெப்பத் தாங்க முடியாது வருந்திய மாந்தர், தண்ணொனி வீசும் திங்களையும் புகழ்ந்து போற்றினர். 'பிறை தொழுகென்றல்' என்னும் அகப் பொருட்டுறை, திங்கள் வணக்கம் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தமையைக் காட்டும். காவிரிப் பூம்பட்டினத்தில் திங்கட்கும் கோவி லிருந்தது. இளங்கோ வடிகளும், " திங்களைப் போற்றுதும் திங்களைப் போற் றுதும்” என்று மங்கல வாழ்த்துப் பாடினார். “நிலாக்கோட்டம்’’ (சிலப். கூ: க௩).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/42&oldid=1428975" இலிருந்து மீள்விக்கப்பட்டது