பக்கம்:தமிழர் மதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திணைத் தெய்வம் குறிஞ்சித் தெய்வம் குமரிநிலை வியல் குறிஞ்சி நில மக்கன் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கி னர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு. "செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் செச்சைக் கண்ணியன்" (திருமுரு. உரசு-உ.அ). "பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கை ............. .…............... சேவலங் கொடியோன்.. (குறுந். கடவுள்.). "உடையு மொலியலுஞ் செய்யைமற் றாங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் உருவு முருவத்தீ யொத்தி முகனும் விரிகதிர் முற்றா விரிசுட ரொத்தி> (பரிபா. ககூ: எை -க00). வேட்டைத் தொழிலாற் குறவர் மறஞ் சிறந் திருந்ததனால், தம் தெய்வத்தையும் மறவனாகக் கருதி, அதற் கேற்றவாறு அவனை முருகன் (இளைஞன்) என்றனர். முள் - முளை - முளையன்-சிறுவன். முள்-முர்- முரு- முருகு = இளமை (திவா.), அழகு (பிங்.). இளமையி லேயே அழகிருப்பதால், அழகு என்பது வழிப்பொருளே. முருகு- முருகன் - கட்டிளமையோன் (திவா.), முருகத் தெய்வம். முரு கன் என்னும் பெயர், இலக்கிய வழக்கில் ஆண்பாலீறு குன்றி யும் வரும். "அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். கூகக). குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்னும் பொருளதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/45&oldid=1428898" இலிருந்து மீள்விக்கப்பட்டது