பக்கம்:தமிழர் மதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ தமிழர் மதம் சுல் - சுள். சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை. சுள்-சுள்ளை- கலமுஞ் செங்கலும் சுடும் அடுப்புப் போன்ற காளவாய். சுல் - செல் - சேல் - செந்நிறக் கெண்டை மீன். சேல்விழி - சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண். நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்பின் பெயர் செந்நிறத் தைக் குறித்தது. ஒ.நோ : எரி = நெருப்பு, சிவப்பு.எரிமலர் -க.சி வந்த முருக்க மலர். "எரிமலர்ப் பவளச் செவ்வாய்' (சீவக. கூ(உ). உ.செந்தாமரை,'"செல்வ னெரிமலர்ச் சேவடியை" (சீவக. உஎசக). செல்--செள்-செட்டு - செட்டி-க.சிவந்த அடியை யுடைய வெட்சிச்செடி. ‘‘செங்கால் வெட்சி"" (திரு முரு.உக). உ.முருகன். செள்-செய்-செய்யவன் - க. சிவந்தவன். உ. கதிரவன். ௩. செவ்வாய்.செய்யன் - முருகன். செய்யாள் (செய்யவள்)-செங்கோலத் திருமகள். செய்யான் - சிவந்தவன், செம்பூரான். செய்-சேய்=சிவப்பு, செவ்வாய், முருகன். சேய்-சேயது-சேய்து = சிவந்தது. சேய்து-சேது. சேது+ஆ-சேதா. சேது+ஆம்பல் = சேதாம்பல். சேய் - சேயன்-சேயான் - செந்நிறத்தான். சேயவன் -செவ்வாய், முருகன். சேயோன் - முருகன், சிவன். சேய் - சே. சேத்தல்-சிவத்தல். சே-சிவப்பு, சேங்கொட்டை. சே-சேத்து-சி வப்பு. சேத்து-சேந்து- சிவப்பு, தீ, அசோகு. சேந்து - சேந்தன் =சிவந்தவனான முருகன். சேந்தன்- சேத்து. ஒ. நோ: வேந்தன்-வேத்து, முருகன்-முருகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/54&oldid=1428908" இலிருந்து மீள்விக்கப்பட்டது