பக்கம்:தமிழர் மதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் சேந்து + இல் = சேந்தில் - செந்தில். சேந்து + ஊர் - சேந்தூர்- செந்தூர் (திருச்செந்தூர்). செய்- செய்ம்மை-செம்மை செவ்வை. செம்- செவ்- செவ-செவப்பு. செவ-சிவ-சிவப்பு-சிகப்பு. சிவ - சிவல் - சிவலை. சிவ- சிவம்-சிவன்- சிவந்தவன், நெருப்பின் கூறாக நின்று உலகத்தை இயக்கும் இறைவன். தீவண்ணன், அந்திவண்ணன், அழல்வண்ணன், மாணிக் கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக. சிவன் மாலை குறிஞ்சி நிலத்திற் குரிய கொன்றை மாலை. கொன்றை வேய்ந்தோன்—கொன்ற வேந்தன். சிவனூர்தி குறிஞ்சி நிலத்திற்குரிய (வெண்) காளை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது. சிவன் படைக்கலம் முக் கவர்ச் சூலம். அதனாற் சிவனுக்குச் சூலி என்று ஒரு பெயர். கணிச்சியும் (மழுவும்) சிவன் படை. அதனால் அவனுக்குக் கணிச்சியான் (மழுவாளி) என்றும் பெயர். சிவனிருக்கை வீட்டுலகமும் வெள்ளிமலையும் திருக்கோவில்களும் தொண்ட ருள்ளமும். சிவன் குணம் தன்வயத்த னாதல், தூய வுடம்பின னாதல், இயற்கை யுணர்வின னாதல், முற்று முணர்தல், இயல்பாகவே கட்டுக் களின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை என்னும் எட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/55&oldid=1428910" இலிருந்து மீள்விக்கப்பட்டது