பக்கம்:தமிழர் மதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் (கூ) தெய்வப் பெருக்கம் ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அசுவினியர் இருவர் ஆகத் தேவர் முப்பத்து மூவர் எனக் கணக்கிட்டு, பின்னர் அவரை முப்பத்து முக் கோடியரா கப் பெருக்கினர். எரு இனி, தேவகணத்தா ரென்று பதினெண் வகுப்பாருங் குறிக் கப் பட்டனர். அமரர் சித்தர் அசுரர் தைத்தியர் கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர் பசாசர் அந்தரர் முனிவர் உரகர் ஆகரிய வாசியர் போக பூமியர் பாகு பட்டன் பதினெண் கணமே. (பிங், உ : கூஉ). "நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்.33 என்னுஞ் சிலப்பதிகார அடிகள் (ரு : களகூ - அ), தமிழ வேந் தர் ஆரியர்க்கு அடிமைப் பட்டுப் போனதைக் காட்டும். முல்லை நிலத்து முகில் தெய்வமாகிய மாயோன் வணக்கத் தினின்று திருமால் மதம் தோன்றியதுபோல், குறிஞ்சி நிலத்து முருகன் (சேந்தன்) வணக்கத்தி னின்று சிவ மதம் தோன்றி யிருப்பினும், பொதுமக்கள் பண்டை முறையிலேயே முருக வணக்கத்தை இன்றும் போற்றி வருவத னாலும் அவன் இளைஞன் எனக்கொள்ளப்படுவதாலும் அவன் சிவன் மகனாக்கப்பட்டான். முதன்முதற் சிவன் மகனென்றும் பிள்ளையார் என்றும் பெயர் பெற்றவன் முருகனே. கடைக் கழகக் காலத்திற் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்றொரு புலவ ரிருந்தார். அவர் தந்தை பெயராகிய கந்தப் பிள்ளை என்பது முருகன் பெயரே. புறப் பொருள் வெண்பா மாலைக் கரந்தைப் படல உக-ஆம் வெண்பாவில் வரும் "வேன் முருகன் என்னுந் தொகைச் சொற்கு, "வேலினை யுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/91&oldid=1428958" இலிருந்து மீள்விக்கப்பட்டது