பக்கம்:தமிழர் மதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் பிள்ளையார்" என்று உரை வரைந்துள்ளார் சாமுண்டி தேவ நாயகர். நச்சினார்க் கினியரும், திருமுருகாற்றுப்படை யுரையில், முருகனைக் குறிக்கப் "பிள்ளையார்" என்னுஞ் சொல்லை ஆண் டிருக்கின்றார். கி.பி.ரு-ஆம் நூற்றாண்டில் தோன்றிய விநாய கர்க்கு 'மூத்த பிள்ளையார்' என்னும் பெயர் ஏற்பட்டது வேடிக் கைச் செய்தியே. முருக வணக்கம், கி. மு. க0-ஆம் நூற்றாண் டிற்கு முன்னரே, குமரி நாட்டுக் குறிஞ்சி நிலத்தில் தோன்றிய தென்பதை அறிதல் வேண்டும். எ• சேயோன் சிவன் என்னும் இரு சொல்லும் சிவந்தவன் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இரு வேறு வடிவமாயினும், நடை முறையில் அவை இரு வேறு தெய்வங்களைக் குறித்தலாலும், சேய் என்னும் முருகன் பெயர் குழவி என்றும் பொருள் படுத லாலும், முருகன் குமரன் என்னும் பெயர்கள் இளமை பற்றியவை யாதலாலும், முருகனைத் தமிழரே சிவன் மகனாகக் கொண்டு விட்டதாகத் தெரிகின்றது. இது, பாலை நிலத் தெய்வமாகிய காளியைச் சிவன் தேவி யாக்கியது போன்ற, சிவ மத விரி வளர்ச்சி. முருகனும் சிவனும் நிறத்தில் ஒத்தவ ரேனும், பருவம் வடி வம் தோற்றம் தேவி மாலை படைக்கலம் ஊர்தி அணி வழி பாட்டு முறை முதலிய வற்றில், முற்றும் வேறுபட்டவ ராவர். வெறியாட்டு, காவடியெடுப்பு, காவு கொடுப்பு, முருக வள்ளி யர் இளமையும் அழகும், அவர் மயிலூர்தி முதலியன பொது மக்கள் உள்ளத்தை முற்றுவ் கவர்ந்து விட்டன. அதனால், காளி சிவன் தேவியான பின்பும் தனியாக வணங்கப்பட்டது போல், முருகன் சிவன் மகனான பின்பும் தனியாக வணங்கப் பட்டான். புலவர் முருகனைச் சிவனோ டொப்பக்கொண்டு, வீடளிப் பதிகாரமும் அவனுக் குரிமைப் படுத்தினமை, திருமுரு காற்றுப்படையால் அறியப்படும். முருகன் முளைமந்திரப் பொருளைச் சிவனுக்கு விளக்கிக் கூறி, அதனால் தன் தந்தைக்குக் குரு (தகப்பன் சாமி) ஆனான் என் பதும், முருக சிவர் சமன்மையை உயர்வு நவிற்சியாற் காட்டும். முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானையை நிலவூர்தி யாக்கினது புலவர் செயல் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/92&oldid=1428960" இலிருந்து மீள்விக்கப்பட்டது