பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157


கொய்யு ளைப்புறங் கொண்டவர்
மெய்ய றுந்திட வீசினார்”

என வீரப் பனுவல் இசைக்கிறார். இவ்வளவு வீரத்தோடு ஆவேசமாகப் போராடும் செய்யிதத்தின் வீரப் போரின் விளைவால்

“தலைகு விந்தன தானையின்
சிலைகு விந்தன செம்புனல்
அலைபொ ருந்திய வாறெலாம்
மலைகு விந்தன வாறுபோல்”

எனக் கூறி மகிழ்கிறார்.

போர்க்களத்தே எதிர்ப்பட்ட எதிரிகளின் கையை வெட்டியும் காலைத் துண்டித்தும் தலையைக் கொய்தும் வீரப்போர் புரியும் செய்யிதத்து ஆணா அல்லது பெண்ணா என்ற ஐயப்பாட்டையே வீரர்கள் மத்தியிலே ஏற்படுத்தி விடுகிறது. அப்பெண்ணணங்கால் அதுவரை உலகம் கண்டிராத புதுவகை இரத்த ஆறு உருவாகிப் போர்க்களத்தே ஒடுவதாகக் கூறி, செய்யிதத்தின் வீரத்தைப் போற்றுகிறார்

.

“கையறுந்து புய வரையறுந்துபய
காலறுந்துவிழ வாயற
மெய்யறுந்துவரி யுரமறுந்துநடை
வெப்பரிக்கள மறுந்திட
செய்யிதத்தெனு மிசைந்தநாமமுறு திருவினாள்
பொருத செங்களம்
வையகத்திலொரு புதியசோரிநதி வந்து
தோன்றுவது போன்றதே”

எனப் பாடி செய்யிதத்தின் வீரச் செயலை விளங்கவுரைக்கிறார்.