பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

கொலைக்களத்தே மாண்டு கிடக்கும் எதிரிப்படை வீரர்களின் பிணங்கள் எவ்வாறு கிடந்தன என்பதைக் கூறும்போது, அழகிய உவமையைக் கையாண்டு போர்க்கள அவலச் சூழலையே நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டிவிடுகிறார் புலவர்,

செந்நீர்க் கடலிடை மிதந்து கிடக்கும் பிணங்களின் வயிற்றைக கிழித்துப் பருந்துகள் கவ்விச்செல்கின்றனவாம் அபபோது தொங்கும் குடல்களோடு பருந்து செல்லும் காட்சி, தரையிலே சிறுவர்கள் பட்டம் விடுவதுபோல் காட்சியளிக்கிறதெனக் கூறுவதன் மூலம் நம்மை கொடூர மிக்க போர்க்களத்திற்கே அழைத்துச் சென்று காடடி விடுகிறார் புலவர் .

"வாரி நிகர்த்தசெந் நீரில் உறும்பின
    வல்லுத ரக்குடலை
தேரோடு பற்றியெ டுத்தபருந்து
     நெடுந்தொலை விண்செலவே
தாரணி மீது தரித்திளைஞோர்கள்
     சமைத்துள பட்ட மதைச்
சீரொடு கட்டிய நூலொடும் விட்டுச்
    சிறந்து பறந்தனபோல்."

இதே போன்று போர்க்களக் காட்சியை மற்றுமொரு கல் எறியப்பட்டபோது தாவிப் பறந்தோடும் காக்கைகளைப் போல் எதிரிகள் செய்யிதத்தின் அம்பு தங்களைக் குறிவைத்து எய்யும்போது அலறித் தாவி ஓடினராம். விண்ணில் பறக்கும் பருந்து தரையில் இறை பொறுக்க அலையும் குஞ்சுகள் மீது குறி வைத்துப் பாயும்போது பயத்தால் நடுங்கிய குஞ்சுகள் புகலிடம் தேடி ஓடித்தப்பிக்க முயல்வதைப்போல், எதிரிகள் செய்யிதத்தின் குறியினின் றும் தப்பி அலறியடித்து அங்குமிங்கும் ஓடினராம். தங்-