பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மாறும் இயல்பு கொண்ட மனித வாழ்க்கைக்கு மாறாத உண்மைகளைக் கூறவல்ல இலக்கியங்களை உருவாக்குவதற்கு மாறாக, மேலோட்டமான வெறும் உணர்ச்சிகளை உள்ளடக்கிய வெற்றிலக்கியங்கள் மட்டுமே இக்கால கட்டத்தில் வெளிவந்தன அறிவுக்கு விருந்தூட்டுவதற்கு மாறாக வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே இவ்விலக்கியப் படைப்புகள் இரையாக அமைந்தன. 'கூளப்ப நாயக்கள் காதல்’ போன்ற காமச் சுவை நனி சொட்டச் சொட்ட கவிதைகள் புனையப்பட்ட கால கட்டத்தில் கருத்தைவிட-ஆழமான சிந்தனைகனை விட, காமச் சுவையே இலக்கியப் படைப்பின் மையம் என்ற உணர்வில் சிக்கிக் கிடந்த சூழ்நிலையில், பாலுணர்வற்ற ஒழுக்க இலக்கியங்கள் ஏதேனும் உருவாகாதா எனத் தமிழகம் ஏங்கிய காலத்தில் பாலுணர்வற்ற ஒழுக்க அடிப்படையிலான பேரிலக்கியங்களை நூற்றுக்கணக்கில் எழுதிக் குவிந்தனர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள். தடம் புரண்டு போன தமிழ் இலக்கியத் துறையை மீண்டும் நேர் வழிக்கு இட்டுச் சென்று, வளர்த்து, வளப்படுத்திய பெருமை அவர்கட்குண்டு இதற்குப் பெரும் அனுசரணையாக அமைந்தது இஸ்லாமிய நெறி. பாலுணர்வைப் பாட இஸ்லாத்தில் நேரடியான அனுமதியில்லை. இதனால், பாலுணர்வை மையமாகக் கொண்டு பாடாது. வாழ்வியல் உயர்நெறிகளைப் போற்றும் இலக்கியங்களாகவே, இஸ்லாமிய இலக்கியங்கள் மலர்ந்து மணம் வீசின.

இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்

தமிழ் மொழியில் சங்க காலம் தொட்டு வழிமுறையாக வழங்கிவந்த இலக்கிய வகைகள் அனைத்திலும் இஸ்லாமிய இலக்கியங்களை எழுதிக் குவித்தனர் தமிழ் முஸ்லிம் பெருமக்கள். இன்னும் சொல்லப்போனால், பதினாறாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்ததாகக் கூறப்படும்