உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 1884இல் பிறந்தார். வேங்கடசாமி நாட்டாருக்கு முதலில் இடப்பெற்ற பெயர் சிவப்பிரகாசம். இளம் பருவத்தில் காலில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதல்ை மனம் வருந்திய பெற்ருேர், மருத்துவரைக்கொண்டு அதனைக் கிழிக்கச் செய்து ஆற்றினர்; திருப்பதிக்கு முடிவைத்துப் பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர் என்பர். திண்ணப் பள்ளிக் கல்வி s இவர் திண்ணைப் பள்ளிகளில் கல்வி பயிலத் தொடங் கினர். அதில் நெடுங்கணக்குப் பயின்ற பின்னர் இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று என்பவற்றைச் சிற்சில நாள்களில் பயின்று முடித்தார். அதன் பின்னர் இவருடைய தந்தையார் கருத்தின்படி ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நீதிநூல்களைப் படித்தார். திண்ணைப்பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து சாம்பமூர்த்தி ஐயர் அவர்களால் நடத்தப்பெற்ற தொடக்கப்பள்ளியில் நான்காம் வ கு ப் பு வ ைர பயின்ருர். வீட்டுத் திண்ணையில் வழக்கமாகப் படிக்கப் பெற்று வந்த சில புராணக் கதைகளை விருப்புடன் கேட்பார். - வித்தகத்திற்கு வித்து பள்ளிப் படிப்பை விட்டபின்பு இவருடைய தந்தை யாரிடத்துத் திருப்புகலூர் அந்தாதி, திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, வெங்கைக்கோவை என்னும் பிரபந்தங்களையும், நைடதத்தின் முற்பகுதியையும் பாடங்கேட்டு அறிந்தார். நைடதத்தின் பிற்பகுதியையும், கம்பராமாயண, வில்லிபாரதப் பகுதிகளையும் த ங் ைத யிலா ர் மு ன் பொருளுணர்ச்சியோடு படிப்பார். அக்காலத்து இவருக்கு வயது பதினறு. சூடாமணி நிகண்டில் பதினேராம் தொகுதி முழுமையும் இவருக்கு மனப் பாடம். இவர் போப்பையர் சிற்றிலக்கணம் பயின்றிருந்தார். நன்னூல் பாயிர இயலிலும், எழுத்தியலிலும் உள்ள சூத்திரங் களைத் தாமாகவே மனப்பாடம் செய்திருந்தார். செய்யுள் களின் பொருளைக் கூடியவரையில் சரியாய் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இவருக்கு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/100&oldid=880908" இலிருந்து மீள்விக்கப்பட்டது