பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நாவலர் நாட்டாரய்யா அவர்கள் பேராசிரியர் திரு. ராம்போ லா மாஸ் கரேனஸ், எம். ஏ. தலையாய செல்வம் செல்வங்கள் பலதிறத்தன. பொருளுடைமை தான் செல்வம் என்று பொதுவாகக் கொள்ளப் பெறுகின்றது. என்ருலும், நமது நீதி நூல்களும் இலக்கிய நூல்களும் அன்புச் செல்வம், அருட்செல்வம், மக்கட் செல்வம், மனச் செல்வம், புத்தகச்செல்வம், வித்தகச் செல்வம் முதலிய பல செல்வங்களும் உண்டு என்பதனை உணர்த்தி வருகின்றன. வித்தகம் என்பது ஞானம்; ஞானம் என்பது நல்லறிவாகும்: சென்ற விடத்தால் செலவிடாது நன்றின்பால் உய்க்கும் நல்லறிவாகும், மனம் போன போக்கில் நமது புலன்களைப் போகவிடாது, நிலமறிந்து செலுத்தும் குதிரைப் பாகனப் போலப் புலம் தெரிந்து நம்மைச் செலுத்தும் நல்லறிவாகும். இந்த வித்தகச் செல்வத்தை உலையாத முயற்சியோடு பேணி வளர்த்த பெருந்தகைச் செல்வர்களுள் சிறந்த செல்வர் நாவலர் ந. மு. வேங்கடசாமி காட்டார் அவர்கள் ஆவர். தோற்றமும் பெயரும் திருவையாற்றை அடுத்த நடுக்காவேரி என்னும் பதியிலே வேங்கடசாமி நாட்டார் அவர்களின் பாட்டனர் விரு நாட்டார் அவர்கள் வாழ்ந்து வந்தார். கற்றவர்களிடத்து மிக்க அன்புடையவர். தம் மக்களாகிய முத்துசாமி நாட்டார், சொக்கலிங்க நாட்டார் என்ற இருவருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்தார். அவருடைய மக்களில் மூத்தவர் முத்துசாமி நாட்டார். அவர் நாள்தோறும் நீராடி நண்பகலிலும் இரவிலுமாக இரு வேளைமட்டும் உண்ணும் வழக்கமுடையவர்: தெய்வ பக்தியில் திளைத்தவர். இவருடைய வாழ்க்கைத் துணைவி தைலம்மாள் குடித்தனத்தைச் செவ்வனே நடத்திவந்தனர். இவர்களுக்கு மக்கள் எண்மர், இவர்களுள் நமது வித்தகச் செல்வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/99&oldid=881323" இலிருந்து மீள்விக்கப்பட்டது