பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 உண்டு. எடுத்துக்காட்டாக இ ல க் கி ய த் துறையில், தென்னட்டிலக்கியங்கள் வடநாட்டிலக்கியங்களைக் காட்டிலும் பழமையும் வளமும் பரப்பும் தனிப்பண்பும் உடையவை யென்பதைக் காணலாம். மேலும், த மி ல் பிற்கால இலக்கியத்தையும். சங்க இலக்கியத்தையும் ஒப்பிட்டுக் காண்போர், பின்னதன் கலவைப் பண்பையும் முன்னதன் தனிப் பண்பையும் வேறுபிரித்துக் காணக்கூடும். இலக்கியத் திலுள்ள இவ்வேறுபாடே நாகரிகத்திலும் கலையிலும் . பண்பிலும் உள்ள வேறுபாட்டை நன்கு குறித்துக் காட்டு கின்றது. சங்க இலக்கியம் இயற்கையோடும் வாழ்வோடும் ஒட்டியது; சமயக் கருத்துக்கள் உடையதாயினும் சமயச் சார்பற்றது. தற்புனைவும் அணியழகும் நிறைந்ததாயினும் இயற்கை வாய்ம்ை கடவாதது. பொருந்தாக் கற்பனைக்கு அ. தி ல் இடமில்லை. கலைத்துறையிலும் வடநாட்டுக் கலை, தென்னுட்டுக்கலை ஆகியவற்றின் வேறுபாடு இத்தகையதே யாகும். தென்னாட்டுக்கலை வாழ்க்கையையும் இயற்கை வாய்மையையும் பேணுவது: 음과 க ற் ப னை க ளி ல் உலவுவதன்று. அருஞ்சொற்பொருள் : மெய் வண்ணங்கள் - வடிவில் உள்ள அ ழ கு க ள், மை வண்ணங்கள் . பலவகையான வண்ணக்குழம்பு; கைவண்ணம்கைத்திறமை, பேரளவு - மிகுந்த அளவு: கலிந்துவிட்டது - والا ہرےlib 5ا விட்டது; பேணி - போற்றி: கடவாதது - தாண்டாதது. வினுக்கள் : 1. இரவிவர்மாவைப் பாரதியார் எவ்வாறு பாராட்டியுள்ளார் ? 2. இரவிவர்மா புகழ் பரப்பிய கலைஞர், மக்கள் கலைஞர் என்பதைப் பதினைந்து வரிகளில் எழுதுக. 3. இரவிவர் மாவின் கலைப்பண்பை விளக்குக. 4. இரவிவர்மாவின் க லே ப ற் றி ய கருத்தை விரிவாகக் குறிப்பிடுக. 5. கலமரபின் இரண்டு கூறுகள் யாவை? அவற்றுள் சிறந்தது எது என்பதைப் புலப்படுத்துக. 6. சங்க இலக்கியங்களின் தன்மைகள் யாவை ? --===ജ த-சோ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/98&oldid=881321" இலிருந்து மீள்விக்கப்பட்டது