பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கலையின் கூறுகள் கலைத்துறை ஆராய்ச்சியாளர் கலை மரபின் வரலாற்றை இரண்டு கூறுகளாக வகுப்பர். ஒன்று மேலை உலக மரபு: மற்றென்று கீழை உலக மரபு. பத்தொன்பதாம் நூற்ருண்டு வரை மேலை உலக மரபொன்றையே கலை மரபாக மதித்தனர். கீழ் நாட்டுக் கலையை அவர்கள் கருதவில்லை. இதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் கலையாராய்ச்சிக்குரிய விதியமைதியும், இ ல க் க ண மு. ம் அந்நாட்டின் கலை இலக்கியத்தைக் கலைப்படைப்பைப் பின்பற்றி அமைந்திருந்தன என்பதே. இலக்கியங் கண்டதற்கே இலக்கணம் அமைய முடியும் என்ற பண்டைத் தமிழர் நுண்கருத்தை உணராமல், அவர்கள் தம் இலக்கணத்தின் அமைதிகொண்டு கீழ்நாட்டுக் கலையை அளக்க முற்பட்டனர். எடுத்துக்காட்டாக, மேட்ைடுக் கலைஞர் தம் கலைப் படைப்புக்களைத் திரைச்சட்டத்தில் அல்லது அட்டைச் ச ட் ட த் தி ல் தீட்டுவர். அதில் தம் .ெ ப ய ைர ப் பெரும்பாலும் பொறிப்பர்; தத்தம் தனித் திறங்களை வற்புறுத்திக் காட்டுவர். இதல்ை கலைஞருக்குத் தக்கபடி கலையும் வேறுபட்டதாய் அமைந்தது. ஆளுல், கீழ் நாட்டிலோ ஒவியங்கள் கல்லிலும் சுவரிலும் மட்டுமே தீட்டப்பட்டன. கலைஞன் பெயரோ தனித்திறமோ வெளிப்பட வழியில்லை. பெரும்பாலும் கலை இலக்கணத்தின் கட்டுப்பாடு காரணமாக, கலைஞர் திறமை ஒன்று நீங்க, வேறு எந்தப் பண்பு வேறுபாட்டுக்கும் வழி இருப்பதில்லை. எனவே, மேடுைகளில் ஒரே காலத்தில், ஒரே இடத்திலுள்ள இரண்டு கலைஞர்களின் பண்பு வேறுபாட்டைக்கூட, கீழ் நாட்டில் இரு வேறு காலங்களில் இருவேறு இடங்களில் உள்ள இரு மரபுகளிடையே காண்பது அரிது. சங்க இலக்கியங்களின் தன்மைகள் கீழ் நாட்டுக்கும் மேல் நாட்டுக்கும் நாகரிகத் துறையிலும் கலைத்துறையிலும் உள்ள வேறுபாடுகளைப் போலவே, வட நாட்டுக்கும் தென்னுட்டுக்கும் இவ்விரண்டிலும் வேறுபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/97&oldid=881319" இலிருந்து மீள்விக்கப்பட்டது