உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கலைஞரும் உலகக் கலைஞரும் மட்டுமல்லர், சிறப்பாகக் கீழ்நாட்டுக் கலைஞராகவும், தென்னுட்டுக் கலைஞராகவும் போற்றத்தக்கவரேயாவர். முன்னணிக் கலைஞர் காலத்தாலும், வரலாற்ருலும், மரபாலும், இரவிவர்மா தற்கால இந்தியக் கலைஞரிடையே ஒரு வழிகாட்டியும் முன்னணி விளக்கமும் ஆவர். அவர் வாழ்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியாகும். அந்நூற் ருண்டின் தொடக்கத்திலேயே பொதுவாக இந்தியாவின் கலை மரபு தளர்வுற்று நலிந்துவிட்டது. தென்கோடியில் மரபருது நிலவிய ஒரு சிற்றிழையைக் கைக்கொண்டு, இரவிவர்மா அதைத் திறம்படப் பேணி வளர்த்தார். அவர் கொடுத்த புத்துயிரால் அது புது வாழ்வு பெற்றுத் தென்னுட்டின் கலை மரபை வளர்த்தது; வடநாட்டிலும் கலையில் மக்கள் ஆர்வத்தைத் தூண்டிப் பெருக்கிப் புதிய கலை மலர்ச்சிக்கு வழி வகுத்தது. இங்ங்ணம் அவர் தென்னட்டின் கலைத்துறை மலர்ச் சிக்குத் தந்தையாகவும், வடநாட்டின் கலை மலர்ச்சிக்கு முதல் தூண்டுதல் தந்த முன்னணிக் கலைஞராகவும் திகழ்கின் ருர், படைப்பு முறை கலே மக்களுக்காக என்று கொண்டவர் இரவிவர்மா. கலை கலைஞருக்கு மட்டுமே என்றே, கலைக்கூடங்கட்கு மட்டுமே என்ருே அவர் கருதவில்லை. எனவே, அவர்தம் கலையழகு, கலைத்துறை வல்லுநர் மட்டுமே காணக்கூடிய மறையழகாகவோ பொதுமக்களுக்கு எட்டாத மாயச் சரக்காகவோ அமையவில்லை. மற்ற கீழ் நாட்டுக் கலைஞர் பலரைப்போல, அவர் வடிவைப் புறக்கணித்து வடிவு கடந்த தற்புனைவுப் பண்புகளிலும் கற்பனைகளிலும் ம ட் டு ம் கருத்துான்றவில்லை. வடிவழகிலும் அவர் க ரு த் து ச் செலுத்தினர்; வடிவழகின் மூலமாகவே கருத்தழகிலும் அவர் உள்ளம் தோய்ந்தது. இதல்ை அவர் கலைப்படைப்புக்கள் எவர் கண்களையும் எளிதில் கவர்ந்தன. கவர்ந்த பின் அவர்கள் கருத்தையும் அவற்றில் நிலைக்கவைத்தன. அவரைத் தனிச் சிறப்புப்பட மக்கட் கலைஞராக்கியது இப்பண்பே எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/96&oldid=881317" இலிருந்து மீள்விக்கப்பட்டது