பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வடநாட்டில் புகழ் பரப்பவில்லை. அதுபோலவே, கீழ்நாட்டுக் கலைஞர் எவரும் அவரளவு மேல்நாடுகளில் புகழ் பெறவில்லை என்று துணிந்து கூறலாம். ■ மக்கள் கலைஞர் அவர் மன்னர் மரபுக்குரியவராயிருந்தாலும், மன்னர் பெருமக்கள் மாளிகைக்குரிய கலைஞராய் அமைந்து விடவில்லை. மன்னர் மாளிகைகளிலும், பெ ரு ம க் க ள் மாடங்களிலும் அவர் கலைப்படைப்புக்கள் எந்த அளவுக்கு மதிப்புப் பெற்றனவோ அதிலும் பன்மடங்காக அவை பொதுமக்கள் இல்லங்களில் பாராட்டப் பெற்றன. பொது மக்களும் அவற்றைப் பேரளவு விரும்பி வாங்கினர். அவரளவு மக்கள் உள்ளங்களில் ஊடாடி, அவர்கள் இல்லங்களில் நிலவி அணி செய்து, அவர்கள் பண்பாட்டை வளர்த்த வேருெரு கலைஞனைத் தென்னுட்டிலோ வடநாட்டிலோ காண முடியாது. மன்னர் குடியிற் பிறந்தும் அவர் பேரளவில் மக்கள் கலைஞராகவே விளங்கினர் என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேண்டியதில்லை. கையாண்ட கலப்பண்பு கலையுலகில் கீழ்நாட்டில் இரவிவர்மாவுக்குப் பல வகை களில் சீரிய தனிஇடம் உரியது. கீழ்நாட்டுக் கலைஞர் எவரும் அவரைப்போல் மேல்நாடுகளில் புகழ்பெற்றது இல்லை. இதற்கு ஓர் இயற்கையான காரணமும் உண்டு. அவர் மேனுட்டு முறைகளைத் திறம்படக் கையாண்டார். ஆனல் அவர் மேனுட்டு முறைகளைக் கையாண்டதல்ை அவர் பண்பு மேனுட்டுப் பண்பாய் விடவில்லை. மேட்ைடு முறையின் உதவிகொண்டே, அவர் கீழ்நாட்டுப் பண்பைத் திறம்பட வகுத்துக் காட்டினர். அதன் மூலம் அவர் மேட்ைடவர் போற்றுதலை மட்டுமே பெற்றிருந்தால், நாம் அவர் கலையை உலகக் கலையென்றே கூறுவோம்; ஆயினும் அயல்நாட்டுக் கலையென்றே நாட்டுவோம் ! ஆனல், உண்மை நிலை இதுவன்று. அவர் மேட்ைடில் கலேவல்லுநரால் பாராட்டப் பெற்றது போலவே இந்தியா முழுவதும் மக்களிடையே பேராதரவு பெற்ருர். எனவே, அவர் பொதுப்பட மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/95&oldid=881315" இலிருந்து மீள்விக்கப்பட்டது