பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 இனி, பிறமொழிச் சொற்களை இரவல் வாங்குமிடத்து அவற்றைத் தமிழ் இயல்புக்கு ஏற்ற ஓசையினவாகத் திரித்துக் கொள்ளுதல் ஆன்ருேர் கைக் கொண்ட நெறியாகும். கல்வியிற் பெரியாராகிய கம்பர், இலக்குவன், வீடணன் என்றிவ்வாருக வடசொல் உருவினைத் தமிழ் இய்ல்புக்கேற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேதப் புத்தகத்தை மொழிபெயர்த்தேர்ர் இ யே சு, யோவான், யாக்கோபு என்றிங்ங்னம் தமிழ் இயல்புக் கேற்பச் சொற்களைத் திரித்த மையால் அதன் பயிற்சிக்குக் குறை உண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே பிறமொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மை ஆகாது. கொச்சையாகவும் வழுப்படவும் பேசுவதனையே நல்ல கடையெனக் கொண்டாடி அப்படியே எழுத வேண்டுமெனக் கூறுவார் சிலருமுளர்; அவ்வறிஞர்களே ஆங்கில மொழியில் அவ்வாறு பேசுவதோ எழுதுவதோ செய்தால் எவ்வகை மதிப்பினை எய்தலாகும் என்பதனைச் சிந்தித்தல் வேண்டும். வாழைப்பழம் என்பது வாளைப்பளம் எனவும் வாயப்பயம் எனவும் வாஷைப்பஷம் எனவும் ஒவ்வொரு பக்கத்தில் பேசப் படுகின்றது. இழுத்துக்கொண்டு என்பது இஸ்துகின்னு என்று பேசப்படுகின்றது. இவற்றையெல்லாம் இலக்கியத்தில் ஏற்றுக்கொள்வது எங்ங்ணம் ? சில விதிகளை அனுசரித்து இயல்பாக மாறி வருகின்ற போலியும் மரூஉவும் முதலியன ஏற்றுக்கொள்ளத்தக்கவையே. - - ஓர் ஆற்று வெள்ளத்தைக் குறுக்கே அணையிட்டுத் தடுத்து நிறுத்துதல் கூடாதாயினும் அதன் போக்கிலேயே சென்று பாழாகாதபடி கரைகோலி நேரிதிற் செலுத்தி, கண் வாய்களின் வழியே நீரைப் பாய்ச்சிப் o: விளைவித்தல் அறிவுடைமையாகும். அவ்வாறே மொழியினையும் சில வரம்புகட்குட்பட்டு வளரும்படி செய்து மக்கட்குப் பயன் விளைத்தல் வேண்டும்.' த-சோ-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/106&oldid=880919" இலிருந்து மீள்விக்கப்பட்டது