உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அருஞ்சொற்பொருள் : நன்றின்பால் - நன்மையின் இடத்து; புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை காற்றம் என்னும் ஐம்புலன்கள்; பதி-ஊர்; சாது-துறவி, பாமர கடை-பேச்சு வழக்கு தோடா-பதக்கம்; சஞ்சிகை-செய்தி இதழ்; உறையுள் - இருப்பிடம்; வெகுளி - சினம்; பனுவல் - நூல், இடித் துரைத்தல் - வன்சொற் கூறிக் கடிதல்; வழு - குற்றம்; புனல் - நீர்; கனல் - தீ; தழல் விடுதல் - சுடர் விடுதல். வினுக்கள் : 1. நமது நீதிநூல்கள் கூறும் பல்வகைச் செல்வங்கள் யாவை ? 2. நாட்டார் அவர்களின் இளமைப் பெயர் யாது ? அப்பெயர் ஏன் மாற்றப் பெற்றது ? 3. நாட்டார் அவர்கள் இளமையில் இலக்கிய இலக்கண அறிவு வளர்ச்சி பெற்றது எவ்வாறு ? 4. காட்டார் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வுகளில் வெற்றிபெற்றமையைப் பதினைந்து வரிகளில் எழுதுக. 5. நாட்டார் அவர்கள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தமையைப் பதினைந்து வரிகளில் எழுதுக. 6. காட்டார் அவர்களின் சொற்பொழிவு எவ்வாறு இருக்கும் ? == 7. காட்டார் அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப் பெற்றமையை விளக்கு. 8. நாவலர் நாட்டார் அவர்கள் இயற்றிய நூல்களையும், உரை எழுதிய நூல்களையும் கூறுக. 9. நாவலர் நாட்டார் அவர்களிடம் அமைந்த நற்குணங்கள் யாவை ? 10. பிறமொழிச் சொற்களைத் தமிழில் எடுத்தாளுதல்பற்றி நாவலர் நாட்டார் அவர்களின் கருத்துக்கள் யாவை ? 11. பிறமொழிச் சொற்களே இரவல் வாங்குமிடத்துப் பின்பற்ற வேண்டியமுறை யாது? 12. கொச்சையாகவும் வழுப்படவும் பேசுதலைப்பற்றிய காவலர் நாட்டார் அவர்களின் கருத்துக்கள் யாவை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/107&oldid=880921" இலிருந்து மீள்விக்கப்பட்டது