பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. உழவப் புலவன் டாக்டர். வ. சுப. மாணிக்கம், எம். ஏ., எம். ஒ. எல். பி. எச். டி. களம் : அரசவை. காலம் : காலை. கூற்று : கிள்ளிவளவன் என்ற சோழனும், நப்பசலையார், கோவூர் கிழார், நல்லிறையனர், தாயங்கண்ணனர் என்ற புலவர்களும், நாகனர் என்ற உழவப் புலவரும். கிள்ளி : ുഖ് பெ ரும க் க ேள சின்னுட்களாக உங்களைக் காணப்பெருது கவன்றேன். இன்று ஒருமுகமாகக் காணப்பெற்றமையான், பேருவகை எய்தினேன். உங்கட்கு யாவரும் கேளிர். அவர் வாழ்க்கைத் தீதும் நன்றும் உள்ளபடி அறிந்துகொள்ளும் ஆர்வம் உடையவர்கள். உங்களுக்கு யாதும் ஊர். நாடோடிகள் போலச் சென்று சுற்றிப் பரந்த அறிவுடையவர்கள். ஆதலின் விேரன்ருே எம் குடிமக்களின் துயர் காணவும், என் நாட்டின் நிலை காணவும் வல்லீர். பழியேல் அஞ்சாது எதிர்த்து இடித்துக் கூறவல்ல தறுகண்மையும், புகழேல் எஞ்சாது மனமார வாழ்த்தவல்ல பேராண்மையும் ஆகிய இருபண்புகளும் நா ட் டி ற் கு வேண்டும். இன்றேல், அரசு என்ற ஊர்தி பள்ளத்துப் புக்குப்பட்டுவிடும்; அன்றி மேடு ஏறமாட்டாது பின்வாங்கும். தான்பட்ட துயரை என் எதிரே வந்து மனங்கொளச் சொல் லும் பிறப்புரிமை என் நாட்டு ஒவ்வொரு குடிக்கும் உண்டு என்பது யாராலும் அறியப்பட்ட தொன்று. அவ்வுரிமையை மக்கள் யாரும் செலுத்தவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் இதுவரை துன்பம் யாதும் உறவில்லை என்றுஆகுமா ? யான் அவ்வாறு கருதேன். மக்கட்குப் பிறவி இருக்கும்வரை துன்பமும் பிறத்தல் இருக்கும் என்ற தெளிவா னன்ருே பிறப்புரிமை ே விதிக்கப்பட்டது. என் குடிமக்கள் தம் அறியாமை காரணமாகவும், தம்முட் பகை காரணமாகவும், என் வினையாளர் நடந்துகொள்ளும் போக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/108&oldid=880923" இலிருந்து மீள்விக்கப்பட்டது