பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.S காரணமாகவும், நான் செய்த விதி காரணமாகவும் உழக்கும் துன்பங்கள் பல. அவற்றை அவர் தம்மினும் விரைந்து வந்து என் உளம் பதியப் புலவர்கள் செவியுறுத்துகின்றனர். 'யானை வரும் பின்னே மணியோசை வரு முன்னே' என்ற இயற்கைப்படி, புலவர் முன்வந்து உரைக்கும் சிறப்புரிமை யன்ருே, நாட்டு மக்கள் தம் பிறப்புரிமையை மறக்கச் செய்தது. உழைப்பவனுக்குத் தன் குடி முழுதும் காக்கும் உணவிற்குப் பஞ்சமில்லை ேப ா ல ப் பெரியாரைத் துணைக்கொண்ட அரசனுக்குத் தன் நாடு முழுதும் காக்கும் அறிவிற்குப் பஞ்ச மில்லை. ஆக்கம் அதர்வினவிச் செல்லும் என்ருல், அறிவும் என் அவை வினவி வருமன்ருே ? அஃறிணைப் பொருள்களின் உள்ளங்களையும் தம் உள்ளத்தால் அறியவல்ல மதுகையுடைய நீங்கள் சென்ற ஊர்களிற் கண்ட குறை யாதுமுண்டேல், கேட்கப் பெரிதும் விரும்பினன். கோவூரார் : அரசே வாழ்க.. கின் கிழல் வாழ்வார் உழைப்பிற்கேற்ற உணவும் உணவிற்கேற்ற உழைப்பும், கனவு தேர்ன்ருத உறக்கமும் சிறக்க வாய்ந்தவராதலின், பசியறியாமையும் பிணியறியாமையும் உடையர். உயிருட னிருந்தாரேனும், பொருளில்லாதார்க்கு இவ்வுலகத்து வாழ் வில்லை என்று கருதி, வழியல்லாத வழியானும் அதனையே குவிக்கும் வேட்கை மக்கட்கு இயல்பில் எழும். அம் மனப் பான்மையை அறிந்தே, நீ முட்டுப்பாடின்றிப் பொருள் பெறு மாறு எல்லாக் குடிகட்கும் தொழில் வகுத்துக் கொடுத்திருக் கின்ருய். அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே நுகருமாறு விதிகோலியும் இருக்கின்ருய். ஆதலின் நின் மக்கள் பொருட்பகையறியார். பொருளுடன் வாழ்ந்தாரேனும் புகழில்லாது இறந்தாரை இத்தமிழகத்துப் புலவர், பாட்டினில் பிறந்த பதிவு செய்யார் என்று எண்ணி உண்மை மயங்கி அறங்கடந்தும் புகழ்காணும் மதிநுட்பம் மக்கட்கு உண்டு. அவ்வுண்மையை அறிந்தே உரிமைக்காக, வேற்றுப்பகைக்கு உயிர் கொடுக்கும் மறமும் புகழைத் தரும்; ஒற்றுமைக்காக, வீட்டுப் பகைக்கு மானம் ஒன்றினை விடாது பொருள் முதலாய எதனையும் விட்டுவிடுங் கொடையும் புகழைப் பயக்கும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/109&oldid=880925" இலிருந்து மீள்விக்கப்பட்டது