பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 . புலவர்கள் வழிகாட்டியிருக்கின்றனர்: அதனல், கின் மக்கள் புகழ்ப்பகை யறியார். -- -- . கின் நாடோ எனின், ஒரு பெண் யானே படுத்துக் கிடக்கும் சிறிய இடத்து, ஏழு ஆண் யானைகளை உண்பிக்கும் அளவான நெல் விளைக்குங் காவிரி சூழ்ந்த நாடு. ஆதலின், உழைப்பார்க்கு உணவுப் பஞ்சமில்லை. கின் குடி மக்களோ எனின், தமிழ் வழங்கும் நாட்டகத்தே பிறப்பும் இறப்பும் வேண்டும் என்ற பெரும் பற்ருளர்; ஆதலின், காட்டிற்குக் காவற் பஞ்சமில்லை. நீயோ எனின் குருளையைப் புறங்காக்கும் புலிபோலவும், குட்டியை அகத்தெடுத்துக் காக்கும் குரங்கு போலவும், குடிகளின் புறமும் அகமும் காப்பவன்; ஆதலின், கின் அரசில் செம்மைப் பஞ்சமில்லை. நின்னிடத்துக் குறை யுடையார் பகைவருமிலர். அவரும் வேண்டும் பொழு தெல்லாம் தோற்க கின் பகையைப் பெறுகின்றனர் அன்ருே. (அப்பொழுது வெள்ளைக்குடி நாகனர் உள்ளே நுழைகின்ருர். அரச னிடம் முறைவேண்டுவோர் இருப்பதற்கென ஓரிடம் உண்டு. அப் பக்கத்து அமர்கின்ருர்.) பச8லயார் : கோவே வாழ்க கின் மக்கள் பசியறியார் பிணியறியார், பகையறியார் என்ருர் கோவூர் கிழார். இவ்வறியாமை மூன்றும் வாழ்க. (எல்லாரும் சிரித்தல்) இம்மூன்றுமன்றிப் பிறிதொரு அறியாமையும் மக்களிடம் வாழ்கின்றது. அதுதான் கல்விப் பசி அறியாமை. இவ்வறி யாமை அகலவேண்டாவா ? வயிற்றுப்பசி சோறு உண்டால் நீங்கும். கல்விப் பசி அறிவை" உண்ண உண்ண மிகப் பசிக்கும். வயிற்றுத் தீ தணிக்கும் நாடு வளநாடே. கல்வித் தீ பரப்பும் நாடோ நிலைநாடு. கின் மறவர்களிற் பலர், கூற்றுவனை விருந்தாக ஏற்று உயிர்ச்சோறு ஊட்டும் ஆண்மையாளர்கள்; ஆயின் என்! தம் பெயர் எழுதத் தெரியாத தற்குறியாளர். கின் குடிமக்களிற் பலர் திருக் குறளில் சொல்லப்படும் அறங்கட்குடி இலக்கியமாகும் பெரு மக்கள்; ஆயின் என்! எழுத்துக்களைக் கீறிய கோடுகள் என மயங்கும் குழந்தைகள். ஒரு மகனுக்கு நோய் நீக்கி உடலே வளர்க்கும் தொழிலிருந்தாற் போதுமா ? அறியாமை நீக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/110&oldid=880930" இலிருந்து மீள்விக்கப்பட்டது