பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 வளவ கின் நாடு ஆண்டுகள் பலவாக அமைதி பெற்றிருக் கின்றது. பகைவரும் கொடுக்கு நறுக்கப்பட்ட தேள் போலாயினர். பசலையார் சொல்லிய அறியாமைப் போரைத் தொடங்க இது நல்ல காலமெனக் காண்க. - கிள்ளி : ஆம்; இ.து ஏற்றகாலமே. வில்லும் வேலுங் கொண்டு அறியாமையை வெல்லுதல் முடியாது. சொல்லும் நூலுங்கொண்டே அறியாமையைப் புறங்காட்டச் செய்ய முடியும். இப்போருக்குப் புலவர்களே மறவர்கள். அம் மறவர்களுக்குத் தானத் தலைவர் நப்பசலையாரே. (எல்லாரும் கைதட்டல்.) இறையனுர்: வேந்தே ! மலை என்ற சொல் சிறியது. அதனுட்பொருள் பரப்பினும் உயரத்தினும் பெரியது. அது போலவே பசலையார் சொல்லிய சொற்கள் எண்ணத்தக்கன வாயினும், அவற்றினுட்பொருள் நாடுமுழுவதும் பரவத்தக்க எல்லாரையும் உயர்த்தத்தக்க சிறப்புடையது என்று அறிதல் வேண்டும். கிள்ளி : அக்கருத்தின் சிறப்பை நாடு அறியச் செய்தல் நம் கடன். - இறையனுர் : நாடறியச் செய்வதன் முன், அதன் சிறப்பை நாமறிதல் நல்லது அ ர ேச! சான்ருேர்கள் 'தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்து' என்றும், தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை' என்றும் பாண்டியனைத் தமிழனுகப் புகழ்கின்றனர். தண் புனற் காவிரிக் கிழவனே எனவும், ஒரு பிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு கிழவோய்' எனவும் கின்னை வளவ கைப் புகழ்கின்றனர். இதன்கண் ஒர் உண்மையைக் + காணலாம். கிள்ளி : உ ண் ைம யி ன் றி உரைப்பார்களா ? சான் ருேரும் மறவரும் உழவரும், காட்டிற்கு அறிவும் உடம்பும் உயிரும் போல்வர். மதுரைத் தமிழ், வஞ்சிமறம், புகார்வளம் என்று விதந்து புலவர்கள் காட்டுவதன் நோக்கம், தமிழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/112&oldid=880934" இலிருந்து மீள்விக்கப்பட்டது