உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாதானுங் குறைவற்ற நாடு என்று சுட்டுவதற்கேயன்ருே? அ.தன்றி, ஒரரசின்கண் ஏனையிரண்டும் இல என்று இழித்துக் காட்டுவதோ அவர் நோக்கம்? அ து ேவ கருத்தாயின், பிழையெனக் கூறவும் வேண்டுமோ? இறையனுர்: இப்பொழுது உள்ளபடியை நோக்கின், கின் கருத்து, பிழையில்லை; எனக்கும் உடன்பாடே. என்றும் உள்ள இயற்கை நோக்கின் அவர் கருத்தும் பிழையில்லை. புலியும் யானையும் உருமிப் பொரும் கரடும் முரடும் கொண்ட மலைநாடு, மறத்தை மாந்தர்க்கு இயற்கையில் பிறப்பிக்கும் இடமென அறிக. நீரும் மண்ணுங் கலந்து நிலமகளை மெல்லி யளாக்கும் மருதநாடே வளநாடு என்று அறியாதார் யார் ? புலவர்கள் வந்து ஒருங்கு கூடி அளவளாவிக் கற்றதை விரிக்கும் அவைக்களம் உடைய பாண்டியநாடு தமிழினை எளிதாகப் பரப்ப வல்லதன்ருே ? ஆதலின் வையைகாடன் கல்வி வளர்க்கும் முறையைக் காவிரி நாடன் மேற் கொள்ளல் சாலச் சிறந்தது எ ன் று வேண்டிக் கொள் கின்றேன். கிள்ளி: அறியாமை என்னும் இருளை அகற்றுதல் வேண்டும்; அறிவொளியைப் பெருக்குதல் வேண்டும் என்பது என் உணர்ச்சியைத் தொட்ட கருத்தேயாம். ஆயின், கல்வியைப் பரப்ப என்னிடம் தோற்ற பகையரசன் முறையைக் கைக்கொண்டால், அவன் எள்ளி இறும்பூது எய்தான ? சோழர் குடிப்பெருமை சிறுமையடையாதா? நாட்டிற் கல்விக் குறைவு உண்டு என்று கண்ட உங்கள் அறிவு அரசிற்கு மானக்குறைவை உண்டுபண்ணுது என்று நம்புகின்றேன். கண்ணனுர் : வேந்தே ! நீயும் உன் குடி ம க் க ளு ம் நாங்களும் இன்புறும் தென்றல், பொதிய மலையிற் பிறப்பினும், அது பகைவன் உடைமையோ ? பாண்டியன் ஈண்டுச் செல்லவிடாது விலக்க கினைப்பின், அவ்வாற்றலுக்குக் கட்டுப்பட்டுப் பரவாது கிற்குமோ தென்றல் ? அன்றி, நாம் பகைவன் பொருளென வரவேற்க விழையாது தடுக்க நினைப்பின், அதற்கு உடன்பட்டுப் பின்வாங்குமோ தென்றல் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/113&oldid=880936" இலிருந்து மீள்விக்கப்பட்டது