பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 வஞ்சியான் மலையிற் பிறந்து வரும் நீரே காவிரி என்று நாம் அறியாதவர்களா ? அறிந்தும் அங்கீரைப் பயன் கொள்ளுவதால், வந்த சிறுமை தினையளவேனும் இல்லையே. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி என்று புலவர் புகழ்ந்தது பொய்ப்புகழ்ச்சி யன்றே ! காற்றும் நீரும் மக்களின் பொதுவுடைம்ை என்று காண்பாய்." அதுபோல அறிவும் ஒரு நாட்டின் தனிப்பொருளன்று. அது பரவுதலுக்கு எல்லையுமின்று. ஒருவர் தா என்று கேட்ப, மற்றவர் கொள் என்று கெள் டுக்கும் பொருளுமில்லை; ஆதலின், அறிவு உலகத்தார்க்கே பொதுமை. கின்ட்ைடிற் பிறந்த நாங்கள் பெற்ற அறிவுக்கு வழிவழி வளர்ந்த முத்தமிழ் நாட்டுக் கல்வியே தாயன்ருே சோழர்குலப் பெருமையும் மறப்பெருமையும் வளர்தற்குக் காரணமாயோர், மற்று கின் பகைவேந்தர்தாம் என்று நீ நன்கு அறிவை. மூவேந்தர் நாடும், மறம், வாணிகம், சூழ்ச்சி, அர சியலமைப்பு, வரிவிதிப்பு, மணவுறவு முதலான வளர்ச்சிக்கு ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன என்பது கண்கூடு. இன்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் காதலர்கள் இடை யிடையே ஊடற்பிரிவு கொள்வர். அதுபோல முத்தமிழ் நாடும் தம்முட் பகை கொள்ளுதல் மானத்தைப் பெருக்கிக் கொள்ளுவதற்கேயாம். இறையனுர் : ஆம்; மூவேந்தர் ஊடிலுைம் காதலர் போல் அவ்வூடல் நீட்டிப்பதில்லை. போருக்குப்பின் மகளைக் கொடுத்து மணமுறை கொள்கின்ற இன்பந்தானே நாம் காண்கிருேம். கிள்ளி : (சிரித்துக்கொண்டு) மூவேந்தர் ஊடல் மகட் கொடையாலும் நீங்கும்; அயல் நாட்டவரோடு போர்ப் புணர்ச்சி கொள்ளவும் அவ்வூடல் நீங்கும். பச8லயார் . ஆதலின், பாண்டியநாடு ஆண்மைக்குப் பகைநாடேயன்றி அறிவுக்குப் பகை நாடன்று என்பது வெள்ளிடைமலை (எல்லாருங் கை தட்டல்.) த-சோ-15 ... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/114&oldid=880938" இலிருந்து மீள்விக்கப்பட்டது