உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 களும் உடன் விளைகின்றன. கணவனை யிழந்த காரிகை யரும், தந்தையை யிழந்த சேயரும், அங்கமிழந்த அகதிகளும் எண்ணற்ருேராவர். பஞ்சம் பரவும்; நோய்கள் பிணிக்கும்: தொழில்கள் அழியும்; கலைகள் மறையும். இந்த அவல் நிலையைத் தடுப்பதற்காக அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் வி ரி வா ன முயற்சி, நிலையான முயற்சி இரண்டு உலகப் பெரும் போர்களே அடுத்தே மேற்கொள்ளப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர், அமைதியைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சங்கம் நிலைக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் பயங்கர காசத்தைக் கண்ணுற்ற உலகத் தலைவர்கள்" இனிமேலாயினும் மனித வினத்தைப் பேரழிவினின்றும் காக்கப் போர்கள் நிகழாதவாறு தடுக்கவேண்டுமெனக் கருதினர். இப்போதுள்ள படைக் கருவிகளின் அழிவுத் திறம் சொல்லுந்தரத்ததன்று கொடிப் பொழுதில் உலகின் உயிர்களையெல்லாம் அழிக்கவல்லன. மனிதப்பூண்டே அற்றுவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களும் பிற ஆயுதங்களும் மலிந்து விட்டன. ஆகவே உலகை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டார்கள் சில உலகப் பெரியார்கள். அதற்கிணங்க 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ந க ரி ல் ஒரு மா நா டு கூட்டினர்கள். என்றென்றும் போர் நிகழாதவாறு தடுப்பதும், போர் மூளுவதற்கான காரணங்களை அகற்றுவதும் அவர்களது முதன்மையான நோக்கங்களாம். அவற்றைக் குறித்து கிரந்தரமான ஓர் உலக அமைப்பைப் படைப்பதெனத் தீர்மானித்தனர். அதுவே ஐக்கிய நாடுகளின் சபையாகும். இச்சபையின் முக்கிய நோக்கங்களாவன : (1) நாடுகளுக்கிடையே தோன்றும் சண்டை சச்சரவுகளை வன்முறையிலின்றிச், சமாதானமாகத் தீர்த்து வைத்தல். (2) எல்லா நாடுகளின் பிரதேச உரிமையையும் சுதந்தரத்தை யும் காத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/117&oldid=880945" இலிருந்து மீள்விக்கப்பட்டது