உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 (3) உலக மக்களிடையே நேசப்பான்மையை உண்டாக்கிக் கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் வளர்த்தல். (4) எவ்வித வேற்றுமையும் பாராட்டாது. பின்தங்கிய நாடுகளைப் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், உணவு உற்பத்தி ஆகிய துறைகளில் மேம்பாடடையச் செய்து அந்நாட்டு ம க் க ளி ன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் செயற்படத் தொடங்கியது. இன்று இதன் பொதுச் சபையில் 122 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எல்லாருக்கும் சமமான வரக்குரிமை உண்டு. ஐ. நா. சபை முக்கியமான ஆறு பிரிவுகளைக் கொண்டு பணியாற்றுகின்றது. H. அவையாவன : (1) பொதுச் சபை (4) பொறுப்பாட்சிச் சபை -(2) பாதுகாப்புச் சபை (5) உலக நீதி மன்றம் (3) சமூகப் பொருளாதாரச் சபை (6) ஐ. நா. அலுவல்கம் ஐக்கிய நாடுகளின் சபை நடவடிக்கைகளை ஐந்து மொழி களில் நடத்துகின்றனர். சீனம், பிரஞ்சு, ஆங்கிலம், ரஷியம், ஸ்பானியம் ஆகியவை அம்மொழிகள். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை : இச்சபையின் உறுப்பினராக இருக்கும் எல்லா நாடு களின் பிரதிநிதிகளையும் கொண்டது இப்பேரவை. ஒவ்வொரு நாடும் ஐந்து பிரதிநிதிகளை இச்சபைக்கு அனுப்பலாம். எனினும் ஒரு நாட்டுக்கு ஒரு வாக்குத்தான் உண்டு. முக்கிய மான தீர்மானங்கட்கு மொத்த வாக்குகளில் மூன்றிலிரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இச்சபை ஆண்டுக்கொருமுறை கூடும். ஆண்டுக்கொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். 1953 ஆம் ஆண்டில் நம் நாட்டைச் சேர்ந்த திருமதி விசயலட்சுமி பண்டிட் இச்சபையின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். தமது திறமையில்ை தமக்கும் தம் தாய் காட்டுக்கும் மேலாம் புகழைப் பெற்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/118&oldid=880947" இலிருந்து மீள்விக்கப்பட்டது