உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 108 பாதுகாப்புச் சபை இப்போது இச்சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றுள் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷியா, சீன ஆகியவை கிலேத்த அங்கம் உடையவை. ஏனைய உறுப்பு நாடுகளைப் பொதுச்சபை இரண்டாண்டுகட்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கும். இச்சபை மிகவும் பொறுப்பு வாய்ந்தது. போர் மூளாதவாறு தடுத்தல், அமைதியை நிலைநாட்டல், வரம்புமீறிய நாடுகளின்மீது இராணுவ நடவடிக்கை எடுத்தல், பொருளாதாரத் தடை விதித்தல் ஆகியவை இச்சபையின் முக்கியமான பணிகளாம். இச்சபையின் முடிவுகட்கு கிரந்தர உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புதல் அளித்தாலன்றி. அம்முடிவுகள் செல்லுபடியாகா. கிரந்தர உறுப்பான எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளின் முடிவைத் தகர்க்கலாம். இவ்வுரிமையை விட்டோ (Veto) என்பர். இச்சபை மாதம் இருமுறை கூடும். சமூகப் பொருளாதாரச் சபை இது பொதுச் சபையினல் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்கள் மூன்ருண்டுகட்கொரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், கல்வி, பொருளாதார சுகாதாரத் துறைகளில் மேம்பாடடையப் பாடுபடுதல், வேற்றுமைகளைக் களைந்து அடிப்படை உரிமை களையும் சுதந்தரங்களையும் பாதுகாப்பது இச்சபையின் பணிகளாம். பொறுப்பாட்சி மன்றம் (தருமகர்த்தா சபை) சுய ஆட்சி பெருத நாடுகள், முன்னேற்றம் அடையாத நாடுகள் ஆகியவற்றின் ஆட்சிப் பொறுப்பை இச்சபை மேற்கொள்கின்றது. உலக நீதி மன்றம் இம்மன்றம் ஹாலந்து நாட்டிலுள்ள திஹேக் என்னும் நகரில் அமைந்துள்ளது. இதில் பதினைந்து நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பொதுச் சபையாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/119&oldid=880949" இலிருந்து மீள்விக்கப்பட்டது