பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 பாதுகாப்புச் சபையாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடுகளிடையே ஏற்படும் வழக்குகளை இந்திே மன்றம் விசாரிக்கிறது. - - ஐ. நா. அலுவலகம் இவ்வலுவலகம் கியூயார்க்கு நகரில் உள்ளது. இதனை இயக்கும் மேலதிகாரிக்குச் செனரல் செக்கரட்டரி என்று பெயர். இவர் ஐந்தாண்டுகட்கு ஒருமுறை பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச்சபையால் நியமிக்கப் படுகிருர். இப்பொழுது இப்பதவியை வகிப்பவர் எல்லா நாட்டவராலும் நன்கு மதிக்கப்படுகிற திரு. ஊதாண்ட் எனப்படும் பர்மியர். ஐ. நா. அலுவலகம் பல பிரிவுகளைக் கொண்டது. பன்னட்டினைச் சேர்ந்த பல்லாயிரம் ஊழியர் இதன்கண் வேலை பார்க்கின்றனர். மேற்கூறிய சபைகளைத் தவிர வேறு சில முக்கியமான பணிகளைச் செய்யும் கிளைகளும் உள்ளன. == உலகத் தொழிலாளர் சங்கம் A. தொழிலாளர்களின் நலனில் இச்சங்கம் அக்கறை காட்டு கிறது. இதன் அலுவலகம் ஜினிவாவில் உள்ளது. ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் இது நாடுகளிடையே அறிவியல், கலை, கல்வி மேம்பாட் டுக்காக உழைக்கின்றது. இது பாரிசில் உள்ளது. உணவு விவசாயச் சங்கம் உலக மக்களின் மொத்த உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு, உணவு உற்பத்தி நிலைமையினை ஆராய்ந்து, உணவுப்பொருட் பெருக்கத்துக்கு வழிமுறை காண்பது இச்சங்கத்தின் சீரிய பணியாகும். உலக சுகாதாரச் சங்கம் உலக மக்களின் சுகாதாரத்தைப் பேணுதல், கொள்ளை நோய்களை ஒழித்தல், அதற்கான ஆராய்ச்சிகளை நடத்துதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/120&oldid=880953" இலிருந்து மீள்விக்கப்பட்டது