உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஆகியவை இதன் பேருதவியாகும். இதன் அலுவலகம் ஜினிவாவில் உள்ளது. பீகிங் நகரைத் தலைநகராகக் கொண்ட பொதுவுடைமை சீன இதுகாறும் ஐக்கிய நாடுகளின் சபையில் அங்கம் பெற வில்லை. போர் இன்றியமையாதது, தேவையானது என்ற கோட்பாட்டைக் கொண்டியங்குவதாலும் அச்சபையின் கோட்பாடுகளை மீறுவதாலும் அதனைச் சேர்த்துக்கொள் வதைப் பெரும்பாலோர் எதிர்க்கின்றனர். பார்மோ சா தீவிலுள்ள தேசீயச் சீதைான் அங்கம் பெற்றுள்ளது. மேற்கூறியவாறு பல்லாற்ருனும் உலக மக்களின் நன்மைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பாடுபடுகின்ற இச் சபையுடன் ஒத்துழைத்து இதனை வலுப்படுத்துவதன் மூலம் மனித சமுதாயம் நலமும் வளமும் பெற்றுத் திகழும் ஒரு குடும்பம் என்பதை இச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. அருஞ்சொற்பொருள் : யாண்டும் - எங்கும்; காவு - பலி, அண்டை மண்டலம் - சந்திர மண்டலம் முதலியன; பரிந்துரை - சிபாரிசு; ம ன் ப ைத - மக்கட் சமுதாயம். வினுக்கள் : 1. "வலியார் மெலியார்மேற் பொருதல் யாண்டும் நிகழ்ந்து வந்த செயலாகும்’-இஃது எவ்வாறு பொருந்தும் ? 2. மனிதன் முன்னேற முன்னேறப் போர்களும் எவ்வாறு வளர்கின்றன ? 3. போரினல் விளையும் தீமைகள் யாவை ? 4. ஐ. நா. சபை எவ்வாறு, எப்பொழுது, எங்கே தோற்றுவிக்கப் பட்டது? 5. ஐ. கா. சபையின் முக்கிய நோக்கங்கள் யாவை ? 6. ஐ. நா. சபையின் உட்பிரிவுகள் யாவை ? 7. பாதுகாப்புச் சபையின் அமைப்பு முறைகளை எழுதுக. 8. ஐ. நா. அலுவலகம் எங்குள்ளது? அதன் பொதுச் செயலாள ராக இப்போது பணியாற்றும் வர் யார் ? # - _ ഈ*ജ ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/121&oldid=880955" இலிருந்து மீள்விக்கப்பட்டது