பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பன்னுட்டு நாகரிகம் TTS TTS TTTTT TTTTT TS TS TS T S T TTT T S T TS TS TTTTTT S உண்மை நாகரிகம் இங்கிலவுலகின்கண் மக்கள் தோன்றிய காலமுதல் இந்நாள் வரையிலும், வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும், தங்கள் அறிவிலுைம் திறத்தாலும் செய்துகொண்ட வசதிகளையே மக்களது நாகரிகம் எனக் குறிப்பிடுவார்கள் வரலாற்ருசிரியர்கள். அரசியல், சமுதாயம், பொருளியல், சமயம், நுண்கலைகள், (இசை, சிற்பம், ஓவியம் போன்றவை) இலக்கியம் முதலிய துறைகளிலெல்லாம் மக்களது அறிவு வளர, அவர்களுடைய திறத்தில்ை தோற்றுவிக்கப்பட்ட புதிய படைப்புக்களையே நாகரிகம்' என வழங்குவர் மேலைநாட்டு வரலாற்ருசிரியர். அறிவு வளர்ச்சியும் வசதிப் பெருக்கமும் மட்டுமே மக்களது உண்மையான நாகரிக வளர்ச்சியைக் காட்டுவனவல்ல; அவர்களது உள்ளம் இரக்கம் என்னும் சிறந்த பண்பில்ை வளர்க்கப்பட்டி ருப்பதுதான் அவர்களுடைய உண்மையான நாகரிக வளர்ச்சியைக் காட்டுவதாகும். இதனை வள்ளுவப் பெருங் தகையார் சிறப்பித்துக் கூறும் கண்னேட்டம்’ (இரக்கம்) என்னும் தலப்புப் பாக்களிலிருந்து அறியலாம். மேலே நாட்டவர் கருத்தின்படி நாகரிகம்' என்பதற்குப் பொருள் கொண்டு, உலக நாகரிகத்தின் தோற்றுவாய்களாகக் கூறப் படுகின்ற எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சிந்துவெளி நாகரிகங்களின் சில சிறப்பியல்புகளை நாம் சீர்தூக்கிக் காணலாம். எகிப்து வாழ்க்கை முறை o கி. மு. 5000 இல் வளமிக்க நைல் ஆற்று வெளியில் குடியேறிய வெள்ளைக்காகேசிய இனத்தவரே நைல்வெளி நாகரிகத்தை வளர்த்தவர்கள். குட்டையான உறுதியான, உடலுள்ள இம்மக்கள் சப்பை மூக்கும், நீண்டு ஒடுங்கிய தலையும், கரிய மயிரும் உடையவர்கள். இவர்களது அரசர் த-சோ-16 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/122&oldid=880957" இலிருந்து மீள்விக்கப்பட்டது