உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 களுக்காக எழுப்பப்பட்ட கல்லறைச் (பிரமிட்) சுவர்களிற் காணப்படும் ஓவியங்கள் இவர்களது நாகரிகத்தை அறிய உதவுகின்றன. நைல் ஆற்றில் பல இடங்களில் கரையில் இருந்து கால்வாய்களை வெட்டி, வெள்ளப் பெருக்குக் காலத்தில் தண்ணிரைக் கால்களின் வழியாகக் கொண்டு போய் உணவுப் பொருள்களைப் பயிரிட்டனர். கரை அமைப் பதையும் கால்வாய்களைக் காப்பதையும் அரசாங்கமே கண்காணித்தது. அதற்குரிய வரியும் குடிமக்கள் விளைவித்த கோதுமை, சணல்கார் முதலிய பொருள்களாகவும் ஆடு மாடு களாகவுமாகக் கொடுக்கப்பட்டது. சணலிலிருந்து ஆடை நெசவு செய்தனர். வேலைப்பாடமைந்த மட்கலங்கள் செய்யவும், கண்ணுடியினல் பொருள்கள் செய்யவும் அறிக் திருந்தனர். பொன்னில்ை சிறு அணிகலன்களைச் செய்து அணிந்தனர். மரம், யானைக் கொம்பு, பொன், வெள்ளி, தோல் இவற்றைக் கொண்டு நாற்காலி, படுக்கைகள் முதலிய வற்றைச் செய்தனர். துடுப்புக்களை வைத்துத் துழாவிக் கொண்டு கடல் கடந்து செல்லும் தோணிகளை மரத்தால் அமைத்தனர். அவற்ருல் அவர்கள் நடுத்தரைக்கடலைக் கடந்து சிரியா, கிரீட் நாடுகளோடு வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டனர். - - a எகிப்தின் கட்டடக்கலை o இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் உயிர் மீண்டும் வாழும் தன்மையுடையதென அவர்கள் நம்பினர்; எனவே அவர்களில் இறந்தோரைப் பல வசதிகளோடு புதைத்துக் கல்லறைகளை எழுப்பினர். அரசர்களது உடலைப் புதைக்கும்போது, அதற் கருகிலுள்ள அறையில் மறு வாழ்க்கைக்கு உதவுவதற்காக உணவு, அணிகள், படைக்கலங்கள் முதலியவற்றை வைப்ப தோடு, அவர்களுக்கு வேலை செய்வதற்காக, இம்மையில் தொண்டு செய்த அடிமைகளைக் கொன்று புதைத்து வைப்பது முண்டு. கர்னுக் என்னுமிடத்தில் கட்டப்பட்ட கோயிலும், லுக்கார் என்னுமிடத்தில் க | ண ப் ப டு ம் அரசர்களது கல்வெட்டுக்களடங்கிய கோயிலும், தூண்களடங்கிய பெருங் கூடமும் கட்டடக்கலையில் எகிப்தியரது தேர்ச்சியைக்காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/123&oldid=880961" இலிருந்து மீள்விக்கப்பட்டது