உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1:5 கின்றன. சிங்கத்தின் உடலும், மனிதனின் தலையும் உடைய உருவமொன்றை (Sphinx) கி. மு. 2160இல் செய்துள்ளனர். மரத்திலும், கல்லிலும் பல அரசரது உருவங்களைச் செய்தனர். இறைவழிபாடு o எகிப்தியர் பல கடவுள்களை வணங்கினர்; நைல் ஆறு, பகலவன், ஆசிரிஸ், பல ஆவிகள், விலங்குகள் முதலிய வற்றை வணங்கினர். இவர்களுக்காக எகிப்திய அரசர்கள் பெருங்கோயில்களை எடுப்பித்துப் பலிகள் கொடுத்து விழாக்கள் நடத்தினர். பொதுவாக அவர்கள் கடவுளைப்பற்றிக்' கொண்டிருந்த கருத்து அச்சம் ஊட்டுவது. பல கடவுள் வணக்கத்தையும், கொடிய வழிபாட்டு முறைகளையும் நீக்கி, ஒரே கடவுள் பகலவனே எனவும், அவனும் எவ்வுயிரிடத்தும் அன்பும் பரிவும் உடையவனெனவும் கருத்தை மாற்றி, அதற் கொப்பக் கொடிய வழிபாடுகளை நீக்கி அன்புச் சொற்களால் வழுத்துவதற்காகப் பாடல்களை எழுதிச் சமயத்துறையில் பெரும் புரட்சியொன்றைச் செய்தவன் கி. மு. 1375இலிருந்து கி. மு. 1358 வரை எகிப்தை ஆண்ட அரசனகிய நான்காம் ஆமன்காட்டப் என்பவன் ஆவான். இவனுடைய செம்மையான சமயக் கருத்துக்களுக்காக இவனைப் புகழ்ந்து பேசுகின் ருர் டேவிஸ் என்னும் வரலாற்ருசிரியர். எனினும் எகிப்தியப் பொது மக்கள் இச்சீர்திருத்தக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கவே, இவனுக்குப்பின் வந்த டுடன்காமன் என்னும் அரசன் பழைய கடவுள்களும், கூளிகளும் வாழும் கோயில் களைத் திறந்துவிட்டுப் பழைய கொடிய வழிபாடுகளை வளர விட்டான் ! சுமேரியா எகிப்திய நாகரிகத்தைப் போலவே பழமையிலும், சிறப்பிலும் விளங்குவது சுமேரிய நாகரிகம்; இது மேற்கு ஆசியாவிலுள்ள டைகிரிஸ், யூப்ரடீஸ் ஆறுகளுக்கு இடையே யுள்ள செழிப்புமிக்க வெளியில் கி. மு. 5000இல் சுமேரியரால் தோற்றுவிக்கப்பட்டது. இவரும் எகிப்தியரைப்போல் செமிடிக் இனத்தவரல்லர் க ரு ைம யு ம் .ெ வ ளு ப் பு ம் கலந்த நிறமுடையவர்: எகிப்தியர் நாட்டுப் புறங்களிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/124&oldid=880963" இலிருந்து மீள்விக்கப்பட்டது