பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 சுமேரியருக்குமுள்ள வாணிகத் தொடர்பைக் காட்டுகின்றன. இந்திய விலங்குகளின் வடிவங்களும் அவற்றில் வரையப் பட்டுள்ளன. சுமேரிய சமுதாயத்திலும் அரசர், செல்வர். பூசாரிகள், வணிக்ர் தொழிலாளர், அடிமை என்ற வகுப்புக்கள் உண்டு. சுமேரியர் என்லில்’ என்ற நிலக்கடவுளையும், எங்கி? என்ற நீர்க்கடவுளையும் வணங்கினர். என்வில் எல்லம் என்னும் மலைநாட்டுக் கடவுளாகையால், அக்கடவுளுக்கு உயர்ந்த கோபுரங்களமைத்துக் கோயில் கட்டினர். இறப்புக்குப்பின் உயிர், வாழுந்தன்மையது எனச் சுமேரியரும் எண்ணி இறந்தவருக்குரிய உ ண வு, க ரு வி முதலியவற்றையும் உடலோடு புதைத்தனர். அரசர், அரசியரின் கல்லறைகள் வேலைப்பாடு அமைந்தவை. ஊர் என்னும் இடத்திலுள்ள அரசர் கல்லறைகளில் அரசரது அணிகலன்கள். கருவிகள் முதலியவை காணப்படுகின்றன. ஆட்சிமுறை சுமேரியா- நகர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனி அரசன் உண்டு; அவனே அவ்வூருக்குத் தலைமைப் பூசாரி யாகவும் சில சமயங்களில் இருப்பதுண்டு. இந்நகர்களுக்கு இடையே சண்டைகள் தோன்றிலுைம், ஆற்றுக் கால்வாய் களையும், கரைகளையும் செப்பனிட்டுக் காக்கும் பொறுப்பில் யாவரும் ஒத்துழைப்பர். கி. மு. 2750இல் அக்கேடியர் என்னும் செமிடிக் இனத்தவர் சுமேரியரோடு கலந்து நாகரிகத்தை ஏற்றனர். ஒரு பேரரசாகச் சுமேரியர் விளங்கினர். பல பிரிவுகளாகப் பேரரசு பிரிக்கப்பட்டு ஆளப் பட்டது. வரிப்பொருள் விளைபொருளாகவும், ஆடு, மாடு களாகவும் வாங்கப்பட்டு அரசாங்கக் களஞ்சியங்களிலும் பட்டிகளிலும் சேர்க்கப்பட்டது. பாபிலோன் என்னும் நகரம் அக்கேடியர் தலைவன் சார்கான் என்பால்ை நிறுவப்பட்டுப். பேரரசின் தலைநகரமாயிற்று. பொருள்களை கிறுக்கவும், அளக்கவும் க ரு வி க ள் செய்யப்பட்டன. இவைகளைச் சரிபார்க்கவும், அரசாங்கப் பொருள்களின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கவும் அலுவலாளர்கள் இருந்தனர். சீட்டுப் போட்டுப்பார்த்து வேலைக்கு அமர்த்தும் முறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/126&oldid=880968" இலிருந்து மீள்விக்கப்பட்டது