பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சுமேரியரிடை இருந்ததாகத் தெரிகிறது. பின் காலத்திய அசீரியர், பாரசீகர், கிரேக்கர் சுமேரிய நாகரிகத்தைக் கைக்கொண்டு பரவச் செய்தனர். பாபிலோனியா i கி. மு. 2200இல் பாபிலோனிய நகரை மையமாகக் கொண்டு பரவி வாழ்ந்த செமிடிக் இனத்தவரான அமோரைட் மக்கள் நாகரிக வளர்ச்சிக்குரிய முயற்சிகளில் ஈடுபட்டனர். சுமேரிய நாகரிகத்தின் வளர்ச்சியே பாபிலோனியரின் நாகரிகமாகும். சிந்து வெளியில் உள்ளவர்களைப் போலவே இவர்களும் நீண்ட அகன்ற தெருக்களும், பெரிய விடுகளு முள்ள ஊர்களை அமைத்தனர். பயிர்த்தொழில், பருத்தி ஆடை நெசவு முதலியன இவர்களது தொழில்கள். இவர் களுடைய அரசரில் ஒருவனை அம்முராபி என்பான் தனது மேற் பார்வையிலேயே பழத்தோட்டங்களையும் காய்கறித் தோட்டங் களையும் பயிராக்கி, ஆடுமாடுகளையும் வளர்த்தனன். வண்டல் மண் மிக்க இவ்வெளியில் கற்கள் கிடைப்பதளி தாகையால் கல் உருவங்கள் செய்யப்படவில்லை. இறைவழிபாடும் கல்வியும் சுமேரியக் கடவுள்களையும், போர்க்கடவுளாகிய மார்டுக், காதற் கடவுளாகிய இஷ்டார் ஆகியோரையும் இவர்கள் வழிபட்டனர். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு தனிக் கடவுள் உண்டு. கோயில்களை வாணிகத் தொழில், பனம் கொடுக்கல் வாங்கல் செய்தல், கல்வி பயிற்றல் முதலிய தொழில்கள் நடைபெறுமிடங்களாகவும் பயன்படுத்தினர். நூற்றுக்கு இருபது விகித வட்டியில் பணம் கடகைக் கொடுக்கப்பட்டது. சுமேரிய எழுத்துக்கள் 350 உம் சிறுவர் சிறுமியர் கற்றனர். ஆசிரியர்களே அரசாங்க அலுவலாள ராகவும், பூசாரிகளாகவும் தொழில் செய்தனர். வானில் உள்ள விண்மீன்களின் இருப்பையும், போக்கையும் கணித் தறிந்து, வாழ்வின் எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறும் சோதிடச் கலேயை முதன் முதலில் .ெ த ட க் கி வைத்தவர் பாபிலோனியரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/127&oldid=880970" இலிருந்து மீள்விக்கப்பட்டது