உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நரம்பினல் கொலை முடிப்பதை விட்டு, இசை வடிப்பதை ஆராய்ந்தான். வில் யாழும், யாழ் வகைகளும், நரம்புக் கருவிகளும் உருவாயின. யாழின் இன்றியமையாமை முறையே இவற்றை முழவு, குழல், யாழ் என 'ழ' என்ற தமிழ்ச் சிறப்பெழுத்தைப் பொருத்திப் பெயரிட்டு, இவை தமிழருடையன என முத்திரை பொறித்து வைத்தான் பழங் தமிழன். இவற்றுள் யாழ் இன்பம் தருவதாய், இசையின் அடிப்படையாய்ப் பிறவற்றிற்குத் தலைமை உடையதாய்ப் போற்றப் பெற்றமையை இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. சங்கப் பாடல்களில் இசைக் கருவிகளைப்பற்றிக் குறிப்பிடப் படும்போதெல்லாம் யாழுடன் குழலோ யாழுடன் முழவோ யாழ், குழல், முழவு என்னும் மூன்றுமோ சேர்த்தே கூறப் படுகின்றன. எவை இல்லையேனும் யாழ் இல்லா இசை அரங்கோ, பிற கலையரங்கோ அன்று நடந்ததில்லை. யாழ் வகை வரலாற்றுக்கு எட்டாத காலத்தில் தோன்றிய யாழ், கி. பி. 6ஆம் நூற்ருண்டு வரை கிளைத்துப் பல்கிப் பரவி விளங்கியது. வில்யாழ், சீறியாழ், பேரியாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், மகரயாழ் என யாழ் வகைகள் பலவாகப் பெருகியிருந்தன. குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், நெய்தல் யாழ், பாலையாழ் என அவ்வங் கிலக் கருப்பொருள் வகைகளாக யாழ் வழங்கிற்று. ஆயிரம் நரம்புடைய யாழும் இருந்ததெனக் கேள்விப்படுகின்ருேம். எழில் மிக்க யாழின் உருவம் அமராவதி நகரச் சிற்பத்தில் செதுக்கப் பெற்றுள்ளது. இலக்கியத்தில் யாழ் யாழின் இன்னேசை சங்க இலக்கியம் அனைத்திலும், பிற்கால இலக்கியங்களிலும் வண்டின் ரீங்கார ஒலிக்கு ஒப்புமையாக, ஒருபடித்தாகக் கூறப்பட்டுள்ளது. மிஞறு என்ற தேன்வண்டு முரலுவது போல யாழ் இசைக்கும் என ஒரு சங்கச் செய்யுள் சுட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/133&oldid=880984" இலிருந்து மீள்விக்கப்பட்டது