பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 இருக்கிருேம். இசைக் கலையும் நம்மிடம் இருந்ததெனக் கூறத்தக்க அடிப்படைகள் சில நம்மிடம் உளவே தவிர. அவற்றின்மீது வளர்ந்து ஓங்கி நின்ற அரண்களை இழந்து விட்டோம். முன்பு இசைக் கலையின் உயிர்நாடியாக யாழ்' என்னும் கருவி திகழ்ந்தது: அக்கருவியை இயக்குவதிலே திறமை மிக்கதாய்ப் பாணர்குடி எனும் கலைஞர் பரம்பரை ஒன்று வாழ்ந்தது. கால வெள்ளத்தில் படிப்படியாக இப்பாண் குலமும் யாழும் தமிழ்ப்பண் மரபும் மறைந்து போயின. நமது கலையிழப்பு வரலாற்றில், உள்ளம் உருக்கும் உச்சி நிலையில் கிற்பது "யாழ் இழப்பு வரலாறேயாகும். தோற்கருவி மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழன் விலங்குகளின் தோலை மரங்களில் காயப்போட்டு வைத்தான். அவற்றில் உலர்ந்த குச்சிகள் காற்றசைவால் உராயும் போதெல்லாம் ஓர் ஒலி எழக்கேட்டான். அதைப்பற்றி எண்ணின்ை: தோற்கருவிகள் தோன்றின. துளைக்கருவி - காடுகளில் வளர்ந்து கின்ற மூங்கில்ல் வண்டுகள் துளை யிட்டுச் செல்ல, அத்துளை வழியே புகுந்து சென்ற கோடை யவ்வளி குழலிசையைக் காட்டியது. அதைப்பற்றிச் சிந்தித் தான் குழலும் துளைக் கருவிகளும் பிறந்தன. நரம்புக் கருவி கையில் வில்லை எடுத்துக்கொண்டு, காட்டில் வாழும் விலங்குகளை வேட்டையாடினன் தமிழன். அவ்விலங்குகளைக் குறி பார்த்து அம்பைத் தொடுத்து நாண் ஏற்றி விடும் போதெல்லாம், சுண்டிவிட்ட அந்நாண் ஒர் இனிய ஓசை எழுப்பக் கேட்டான்; மனம் மகிழ்ந்தான்; வில்லிற் பூட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/132&oldid=880982" இலிருந்து மீள்விக்கப்பட்டது