உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. யாழ் எங்கே? வித்துவான் திரு. இராம. பெரிய கருப்பன், எம். ஏ. பெருமை ஏழிசையாய் இசைப்பயனுய் இறைவனைக் காட்டுவது நம் தமிழ். தமிழோடு இசைபாட மறந்தறியாப் பண்பினர் நம் தமிழர். கல்லிலும் இசை வடித்த கலைத்திறன் சான்றது நம் தமிழ்நாடு ! - இசையும் இயற்கையும் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி அனய பல இசைக் கருவிகளையும் அவை ஒவ்வொன்றிலும் பற்பல வகைகளையும் நாம் பெற்றிருந்தோம். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிய ஏழிசை களையும், அவை முந்நிலைப்பட்டு இருபத்தொரு முர்ச்சனை களாகும் வகைகளையும் அறிந்திருந்தோம். பண் பற்றியும். திறம் பற்றியும், இவற்ருல் பிறக்கும் பண்வகைகள் பற்றியும் இலக்கணம் வகுத்திருந்தோம். இடம், நேரம், பொருளுக் கேற்ற பண் வகைகளைப் பெற்றுப் பாடி அனுபவித்து வந்தோம். தமிழன் இவ்வனுபவ முதிர்ச்சியில்ை இயற்கையிலேகூட இவ்விசை மரபு புலப்படுத்துவதைக் கற்பனை செய்து பாடி மகிழ்ந்தான். குயில் கூவுதலைப் பாட்டாகவும், மயில் ஆடுவதை நாட்டியமாகவும், தென்றலிசைப்பதைக் குழலாக வும், வண்டொலிப்பதை யாழாகவும். அருவி முழங்குவதை முழவாகவும் கற்பனை செய்து மகிழ்ந்து அவற்றைத் தம் பாடல்கள்தோறும் குறித்துச் சென்றனர் நம் முன்னேர். இக் கற்பனைகளைப் பழந்தமிழரின் இசைக்கலை வாழ்வின் கிழற்படம் என்ருல் மறுப்பவர் இருக்க மாட்டார்கள். மறுப்பவர் உண் டானல் கண்ணுடி காட்டும் தம் நிழல் உருவைக் கண்டும் தாமிருப்பது பொய்யென மறுப்பவர்க்கு அவர்கள் ஒப்பாவார். யாழ் இழப்பு ஆயினும் பயன் என்ன ? இசைக் கருவிகளை, இசை மரபை, இசைத் தமிழை இழந்த நிலையில் நாம் இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/131&oldid=880980" இலிருந்து மீள்விக்கப்பட்டது