உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சில காலம் யாழும் வினையும் ஆங்காங்கு உலவின. பின்னர் ஆட்சியாளர் கையிலிருந்த வீணே நிலைக்க, மக்கள் கையிலிருந்த யாழ் நழுவி வீழ்ந்தது. யாழும். யாழ் வழிப்பட்ட பண்முறையும், அதனை அறிந்திருந்த பாண்குடியும் படிப்படி யாக முற்றும் அழிந்து ஒழிந்தன. பின்னர் கி. பி. 14, 15ஆம் நூற்ருண்டுகளில் வேரூன்றிய விசயநகரப் பேரரசி காலத்தில் தமிழிசையிருந்த இடத்தில் தமிழுக்குப் பதிலாகத் தெலுங்கும். இசைக்குப் பதிலாக சங்கீதமும் இடம் பெறலாயின. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பதிப்பகத்தார் வெளியிட்ட இந்தியக் கலைமுது நிதியம் என்னும் நூலில் 'கி. பி. 6ஆம் நூற்ருண்டில் புத்த மதத்தோடு யாழும் மறைந்தது' என்று கூறப்பெற்றுள்ளது. கி. பி. 7ஆம் நூற்றண்டினராகக் கருதப்படும் திருநாவுக்கரசர் மாசில் வீணையும் என்று பாடியிருப்பதால், அவர் காலத்திலேயே பல்லவர்கள் வினையை நிலைநாட்டி விட்டனர் என அறியலாம். - இங்ங்னம், குடியிருந்தவனுக்கு வீடு உரிமை ஆற்ை போலவும், கடன் வாங்கியவனுக்கு முதல் உரிமையாற்ை போலவும், யாழிருந்த இடத்தில் வீணையும், தமிழிசையிருந்த இடத்தில் பிற இசையும் உரிமை பெறலாயின. யாழும் வாழ்வும் ஒரு காலத்தில் காதலனின் கையிலிருந்து காதலிக்குக் களிப்பூட்டிய யாழ், குழந்தையின் மழலை மொழியோடு போட்டி யிட்டுக்கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் நின்று நிலவிய யாழ், இவ்வுலகக் கவலையை அகற்றி மிக இனிய இசையால் உள்ளத்தை உருக்கி வானிலே மனித மனம் வட்டமிட வைத்த யாழ், கடவுள் அன்பர்களை நெகிழ்வித்துத் திருக் கோயில்களை வலம் வந்து நிலைபெற்றிருந்த யாழ் மறைந்தது. கைக்குப் பெருமையும், காட்சிக்கு அழகும், காதிற்கு இனிமை யும், காதலர்க்குக் கவர்ச்சியும், அடியார்க்கு அருளும், மற்றவர்க்கு மகிழ்ச்சியும், தந்து வந்த கலேக் கருவூலமாகிய யாழ் மறைந்தது. முத்தமிழில் ஒன்றை, இசைக் கலையைத் தன்ளுேடு இணைத்துக் காத்து வந்த யாழ் மறைந்தது. ஆம். கடலில் முக்குளித்து எடுத்த நன்முத்து, கரையேறு முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/135&oldid=880987" இலிருந்து மீள்விக்கப்பட்டது