பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 கைகழுவிப் போய்விட்டது. தென்றலில் கலந்து வந்த இனிய மலர் மணம், திடீரென வீசிய புயலில் கலந்து மறைந்து விட்டது. அருஞ்சொற்பொருள் : ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், (ச-ரி-க-ம-ப-த-கி); மூர்ச்சனை - நெட்டுயிர்ப்பு; கோடை அவ்வளி - கோடைக் காற்று: புறக்கணித்தமை - ஒதுக்கியமை; மகேந்திரப் போத்தரையன் - மகேந்திர வர்மன்; பாண் குடி - பாணர் குலம்; (புறம் - புறநானூறு). - வினுக்கள் : 1. பழந்தமிழர்கள் இசையையும் இயற்கையையும் இணைத்து வாழ்ந்தனர் என்பதை விளக்குக. 2. கலை யிழப்பு வரலாற்றில் யாழ் இழப்பே பேரிழப்பு என்பதை ஆசிரியர் எவ்வாறு கூறுகிருர் ? - 3. தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி-இவைகள் தோன்றிய வரலாற்றைப் பதினைந்து வரிகளில் எழுதுக. 4. யாழின் இன்றியமையாமையை எழுதுக. 5 யாழின் வகைகள் யாவை ? 6. இலக்கியங்களில் யாழ் எவ்வாறு சிறப்பிக்கப் பெற்றுள்ளது ? 7. யாழ் மறைந்ததற்குரிய காரணங்களைத் தொகுத்து 15 வரி களில் எழுதுக. ~ * 8. யாழ், வாழ்வில் இடம் பெற்றிருந்ததை ஆசிரியர் எவ்வாறு கூறுகிருர் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/136&oldid=880989" இலிருந்து மீள்விக்கப்பட்டது